ராசிபலன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஜனவரி 2 முதல் 15-ம் தேதி வரைஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்

மேஷம்

புதிய பதவி தேடி வரும்!

குரு 7-ம்  இடத்தில் வலுவாக அமர்ந்திருப்பதால், செயலில் வேகம் கூடும். எதிர்பாராத பணவரவு உண்டு. பிரபலங்கள் அறிமுகமாவர். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிலருக்குப் புதிய பதவி, பொறுப்புகள் தேடி வரும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். நட்பு வட்டம் விரியும். மனைவி வழியில் ஆதாயம் உண்டு.  சனி பகவான் 9-ம் இடத்தில் வலுவாக அமர்ந்திருப்பதால் தடைப்பட்ட வேலைகள் முடிவடையும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து, சேமிக்கத் தொடங்குவீர்கள்.

வெளியூர்ப் பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். புது வீடு வாங்குவீர்கள். 14-ம் தேதி முதல் சூரியன் 10-ம்  இடத்தில் அமர்வதால் தந்தையின் உடல் நலம் சீராகும். திருமணம் கூடி வரும். வியாபாரத்தில் புதிதாக முதலீடு செய்வீர்கள். பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் தேடி வரும்.

புதிய வியூகங்களால் வெற்றி பெறும் காலம் இது.


கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

ரிஷபம்

பயணங்களால் திருப்பம் உண்டு!

செவ்வாய் 6-ம்  இடத்தில் வலுவாக அமர்ந்திருப்பதால், தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.. எதிர்பார்த்தபடி வீடு-மனை வாங்குவீர்கள். சகோதரர்களுக்குள் ஒற்றுமை வலுவடையும்.  3-ம்  இடத்தில் ராகு வலுவாக அமர்ந்திருப்பதால், எதிர்ப்புகள் அடங்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். பயணங்களால் திருப்பம் உண்டாகும். வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்குப் புதிய வேலை கிடைக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள்.

சுக்கிரனும், புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்று நடப்பார்கள். புதிய டிசைனில் நகை வாங்குவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அஷ்டமச் சனி நடப்பதால், அநாவசியப் பேச்சைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் தள்ளுபடி விலைக்குப் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் மறைமுகப் பிரச்னைகள் வந்து போகும். கலைத்துறையினருக்கு வேற்றுமொழிப் பட வாய்ப்புகள் கிடைக்கும்.

எதிர்ப்புகளைக் கடந்து முன்னேறும் வேளை இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick