ஞாயிறு போற்றுதும்... ஞாயிறு போற்றுதும்!

மு.ஹரி காமராஜ்

ஆதவனுக்கு அருள் வழங்கும் கெளரிதேவி!

சூரியனின் ஆதார சக்தியானவள், `தீப்தா கௌரி' என்ற திருப் பெயரில் வணங்கப்படுகிறாள். இந்த தேவி, ஆதிபராசக்தியின் அனல் வடிவமாவாள் என்கின்றன ஞானநூல்கள்.

சூரியனின் அந்தராத்மாவில் வாழும் தீப்தா கௌரியை `சவிதா' என்று போற்றுகின்றன வேதங்கள். தீப்தா கௌரியே சூரியபகவானுக்கு வெப்பத்தையும், வெளிச்சத்தையும், நிறங்களையும், சத்துகளையும் தருகிறாள். ஆயிரம் திருமுகங்கள் கொண்ட தீப்தாகெளரியின் கண்களின் தீட்சண்யமே சூரியனின் கிரணங்களாக வெளிப்பட்டு, மற்ற கிரகங்களை வாழ்விக்கிறது என்கின்றன புராணங்கள்.

உன்னதமான உத்தராயனம்

சூரியன், தனது பாதையில் மகர ராசியில் ‘மகர ரவி’யாகப் பிரவேசிக்கும் காலம் உத்தராயன புண்ணிய காலம் ஆகும். உத்தர அயனம் என்றால், `வடக்குப்புற வழி' என்று பொருள்.

தை முதல் ஆனி வரையிலான ஆறு மாதங்களும் உத்தராயன புண்ணிய காலம் ஆகும். மங்களகரமான காரியங்களைச் செய்ய உத்தராயணமே சிறந்தது. இறப்பதும்கூட உத்தராயனத்தில் நிகழ்ந்தால் நற்கதி கிடைக்கும். எனவேதான், தட்சிணாயன காலத்தில் (பாரதப்போர் நிகழ்ந்தபோது) அம்புப் படுக்கையில் வீழ்ந்த பீஷ்மர், உத்தராயன புண்ணிய காலம் வரும் வரை காத்திருந்து உயிர்நீத்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick