‘பூசம் புண்ணியம் தரும்!’

தேச.மங்கையர்கரசி

தைப்பூசம்... தமிழர்கள் கொண்டாடும் திருவிழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. பொதுவாகவே மாதம்தோறும் வரக்கூடிய பூச நட்சத்திரம் சிறப்புக்குரியது. அதிலும் தை மாதத்தில் வரக்கூடிய பூச நட்சத்திரம் இன்னும் சிறப்பானது.

உத்தராயன காலத்தின் முதல் மாதம் தை. இந்த மாதத்தை மகர மாதம் என்று சொல்வார்கள். அகரம், உகரம், மகரம் இவை மூன்றும் ஓம் எனும் பிரணவ மந்திரத்திலிருந்து வெளிப்படுபவை. ஆக தை மாதம் என்பது, இறைவனிடத்தில் நாம் நமக்குத் தேவையான அனுக்கிரஹத்தை வாங்கக் கூடிய மாதம் ஆகும்.

இப்படியான சிறப்புகளுக்குரிய தை மாத பூச நட்சத்திரத்தில், பழநியிலுள்ள முருகப்பெருமானை வழிபடுவது மிகுந்த சிறப்புக்குரியது. எப்படி சூர சம்ஹாரத்துக்குத் திருச்செந்தூர் புகழ் பெற்றதோ, அதைப்போல தைப்பூசத்துக்குப் பழநி புகழ் வாய்ந்தது. குழந்தை ரூபத்தில் குன்றின்மேல் நின்றிருக்கும் முருகப் பெருமானை, இடும்பன் காவடி எடுத்து வழிபட்டதால், பக்தர்களும் அன்றைய தினம் காவடி எடுத்தும், பால்குடங்கள் எடுத்தும் ஆடிப்பாடி மகிழ்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick