விழாக்கள் / விசேஷங்கள் | vizakkal visheshangal - Sakthi Vikata | சக்தி விகடன்

விழாக்கள் / விசேஷங்கள்

தடாக பிரதிஷ்டை

திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் வட்டத்தில் உள்ள கீழப்பாவூரில் அமைந்துள்ள ஸ்ரீநரசிம்மர் திருக்கோயிலின் தீர்த்தக்குளம் மகிமை மிக்கது.

வைகானச ஆகமத்தின்படி மேற்கே அமையும் திருக்குளம் நர்மதை என்றும், கிழக்கே அமைவது கங்கை என்றும் போற்றப்படும். ஸ்ரீநரசிம்மரின் உக்கிரத்தைத் தணிப்பதற்காக இரண்டு நதிகளும் இத்தலத்தின் திருக் குளத்தில் சங்கமித்ததாக ஐதீகம். காலப்போக்கில் சிதிலமடைந்துவிட்ட இந்தத் திருக்குளம், ஸ்ரீநரசிம்மரின் திருவுள்ளப்படி புனரமைக்கப்பட்டு, வரும் 19.1.18

வெள்ளிக்கிழமை அன்று காலை 10.04 முதல் 10.24 மணிக்குள் தடாக பிரதிஷ்டை வைபவம் நடைபெற உள்ளது. பக்தர்கள் கலந்துகொண்டு நரசிம்மரின் திருவருளைப் பெற்று வரலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick