சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகே அபிஷேக ஆராதனை!

இரா.மோகன் - படங்கள்: உ.பாண்டி

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியிலிருந்து சுமார் 22 கி.மீ தொலைவில் உள்ளது மேலக்கொடுமலூர். முருகப்பெருமான் சூர சம்ஹாரத்துக்குப் புறப்பட்டபோது, அன்னை சக்தியிடமிருந்து வேல் மற்றும் பல ஆயுதங்களைப் பெற்றுச் சென்றார். அவற்றுள் பிரதானமான `மழு' எனும் ஆயுதத்தை முருகப் பெருமான் பெற்ற தலம்தான் கொடுமழுவூர் என்றழைக்கப்படும் மேலக்கொடுமலூர்.

அசுரர்களை அழித்துவிட்டுத் திரும்பிய முருகப் பெருமான், மாலை வேளையில் இத்தலத்தை அடைந்தார். அங்கே தவமியற்றிக்கொண்டிருந்த முனிவர்களுக்கு மேற்கு முகமாகக் காட்சியளித்தவர், அவர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் இந்தத் தலத்திலேயே ஸ்ரீகுமரய்யா என்னும் திருப் பெயருடன் கோயில் கொண்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick