மலையாளக் கருப்பருக்கு தைப்பூசம் விசேஷம்!

துரை வேம்பய்யன் - படங்கள்: என்.ராஜமுருகன்

ரூர் மாவட்டம் சிறுதெய்வ வழிபாட்டுக்கு ஏகப் பிரசித்தம். அந்த அளவுக்கு சிறுதெய்வக் கோயில்கள் ஊர்தோறும் நிறைந்திருக்கின்றன. இன்னும் மண்மணம் மாறாமல் இருக்கும் கிராமக் கோயில்களின் அமைப்பே அலாதியான ஆன்மிக அனுபவத்தைத் தரக்கூடியவை.

அந்த வகையில் கரூர் மாவட்டம் அரவக் குறிச்சி ஒன்றியத்தைச் சேர்ந்த வெரிச்சினம் பட்டியில்  கோயில்கொண்டிருக்கும் நல்லையா சாமி எனும் மலையாளத்துக் கருப்பர், பக்தர்களின் வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்று வதுடன், அந்தக் கிராமத்துக்கே காவல் தெய்வமா கவும் விளங்குகிறார்.

கிராமத்தின் மையத்தில் அமைந்திருக்கும் மலையாளத்துக் கருப்பு சந்நிதிக்கு அருகில் தட்டித்தாத்தன் சிலை இருக்கிறது. பின்புறமாக நாகம்மன் ஒரு மரத்தினடியில் காட்சி தருகிறாள். பரிவார சாமிகளான மதுரை வீரன், மாயம் பெருமாள், வீரமாத்தி, விநாயகர் சந்நிதிகளும்  இந்த ஆலயத்தில் அமைந்திருக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick