கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - ஹம்பி 16 | History and Special Darshans of Temples - Hambi - Sakthi Vikatan | சக்தி விகடன்

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - ஹம்பி 16

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
மகுடேசுவரன்

ரெய்ச்சூர்க்கோட்டை முற்றுகைக்காக கி.பி. 1520-ம் ஆண்டு பிப்ரவரித் திங்களன்று ராயரின் படையணிகள் புறப்பட்டன. கோட்டை முற்றுகைகளை மழைத் தண்ணீர் வற்றத் தொடங்கும் கோடையின் தொடக்கத்தில் தொடங்குவதுதான் சிறப்பு. ஏனென்றால், திங்கள்கணக் கில் ஆண்டுக்கணக்கில் அந்த முற்றுகைக் காலம் நீடிக்கலாம். மொகலாயப் படைகள் செஞ்சிக்கோட்டையைக் கைப்பற்ற முனைந்த போது அந்த முற்றுகைப் போர் ஒன்றோ இரண்டோ அல்ல, ஏழாண்டு களுக்கு நீடித்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அதனால் ராயரின் பெருந்திரளான படைகள் கோடையின் தொடக்கத்தில் அந்த முற்றுகையைத் தொடங்கின.

ரெய்ச்சூர்க் கோட்டையானது கைப்பற்றுதற்கு எளிதாய் இருக்கப்போவதில்லை என்பது ராயர்க்குத் தெரியும். அது பிற கோட்டைகளைப் போன்று தரைக்கோட்டையும் இல்லை. ஏறுதற்குக் கடினமான மலைக்கோட்டை. மூன்று பெரு மதில்கள் அசைக்க முடியாதபடி அரண்செய்யும் கற்கோட்டை.

ஒரு கோட்டையானது முற்றுகைக்கு ஆளா னால் அதன் உள்ளேயும் வெளியேயும் நிகழும் போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்படும். மதிலடுக்குகளின் நுழைவாயிற்கதவுகள் இறுக்கி மூடப்படும். உள்ளிருப்பவர்கள் உள்ளேயே இருக்க வேண்டும். கோட்டைக்கு வெளியே இருப்பவர்கள் எவ்வகையினும் உள்ளே நுழைய முடியாது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick