குறை தீர்க்கும் கோயில்கள் - 17 - பாவ விமோசனம் அருளும் திருக்கூடலூர் பெருமாள்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
டாக்டர் ஜெயம் கண்ணன் - படம்: கே.குணசீலன்

‘குறை தீர்க்கும் கோயில்கள்’ தொடரில் இதுவரையில் நாம் தரிசித்தவை எல்லாமே சிவாலயங்கள். முதல் முறையாக, பெருமாள் திருத் தலத்தை தரிசிக்கப் போகிறோம். கும்பகோணத்துக்கு அருகில் இருக்கும் திருக்கூடலூர் என்கிற ஆடுதுறையில் (சீர்காழிக்கு அருகே இருப்பது வேறு ஆடுதுறை)  அருள்பாலிக்கும் அருள்மிகு வையம் காத்த பெருமாளின் மகிமை பல நூற்றாண்டுகளைக் கடந்தது.

108 திவ்யதேசங்களில் 8-ம் இடத்தில் இருக்கும் பெருமை பெற்றது. மதுரை நகருக்கும் கூடலூர் என்ற பெயர் வழங்கப்படுவதால், இத்தலம் ‘வட திருக்கூடலூர்’ என்றும் ‘சங்கம க்ஷேத்ரம்’ என்றும் வழங்கப்படுகிறது.

மிகச் சிறிய கிராமம்...  மிகச் சிறிய கோயில். ஆனால் இதன் கீர்த்தியோ அளவிடற்கரியது. அண்டமே கண்டு நடுங்கும் துர்வாச முனிவரையும் அடிபணிய வைத்த பராக்கிரமம் கொண்டவர் இந்தப் பெருமாள். வடமொழியில் ஜகத்ரட்சகன் என்று அழைக்கப்படுகிறார்.

இத்திருத்தலத்தின் மகிமை பற்றியும் தல புராணம் பற்றியும் விரிவாகப் பேசினார், கோயிலின் மூத்த அர்ச்சகர் கஸ்தூரி ரங்கன் பட்டாச்சார்யர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick