தைப்பூசத் திருநாளில்...

ர் யுகத் தோற்றத்தின்போது, தைப்பூச தினத் தில்தான் நீர் தோன்றியது; நீரிலிருந்தே மற்ற அனைத்துயிர்களும் தோன்றின என்கின்றன ஞானநூல்கள். இதை உணர்த்தவே தைப்பூச நாளில் ஆலயங்களில் தெப்போற்சவம் நடைபெறுகிறது. நீரில் - தெப்பப் பந்தலில் ஈசனும், இறைவியும், முருகனும் உலா வரும் வைபவம், படைப்பின் ரகசியத்தை எடுத்துரைக்கவே என்பது பெரியோர் வாக்கு.

ன்னை பார்வதிதேவி மைந்தன் முருகனுக்கு வெற்றியை அளிக்க வல்ல வேலாயுதத்தை உருவாக்கித் தந்து ஆசி வழங்கியது ஒரு தைப்பூசத் திருநாளில்தான். முருகனுக்குப் பின்னர் தோன்றியதால் சக்தி வேல் முருகனுக்கு தங்கை முறையானது என்று சுவாரஸ்ய விளக்கம் தருவார்கள் சான்றோர்கள். அதனாலேயே கந்தனின் சக்தி வேலினை ‘ஷண்முகி’ என்றும் போற்றுவர். எதிரிகளை வெல்வதற்கு மட்டுமல்ல, அருணகிரியார், குமரகுருபரர் முதலான அடியார்களின் நாவில் அட்சரம் எழுதி, ஞானத்தை அளித்ததும் இந்தக் குமரவேல்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick