அம்பாபுரி ஈசனுக்கு கும்பாபிஷேகம்!

திருவருள் நிறைந்த தொண்டை மண்டலத்தில் பண்டைய அரசர்கள் நிர்மாணித்த 108 சிவத் தலங்களில் 51-வது சிவத்தலம் அம்பாபுரி. இவ்வூருக்கு அம்பலப்புத்தூர் என்றும் பெயருண்டு. தற்போது வழக்கத்திலுள்ள பெயர்- அம்பத்தூர்!

இங்கே காமராஜபுரத்தில் ஸ்ரீசிவகாமி அம்மையுடன் திருக்கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீஅம்பலவாணர். இவரின் திருப்பெயர் கொண்டே, இந்தப் பகுதிக்கு அம்பாபுரி,  அம்பலப் புத்தூர் என்றெல்லாம் பெயர்கள் அமைந்தனவாம்.

ஆடலரசனுக்கே உரிய ‘அம்பல வாணன்’ எனும் திருநாமத்துடன் இறைவன் திகழ்வதால், மார்கழி திருவாதிரை, ஆனித் திருமஞ்சனம் போன்ற தினங்களில் இங்கு சென்று வழிபடுவது சிறப்பு. தவிர, சர்வரோக பரிகார ஸ்தலமாகவும் திகழ்கிறது, இந்த ஆலயம். மாத சிவராத்திரி தினங்களும், மகா சிவராத்தியும், பிரதோஷ பூஜைகளும் வெகு சிறப் பாக நடைபெறுகின்றன. தற்போது, ஸ்ரீஅம்பலவாணர் அறக்கட்டளை யின் மூலம் ஆலயம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick