நாரதர் உலா - நம்மாழ்வார் சந்நிதியில்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

‘ஸ்ரீரங்கபுர விஹாரா...’ என்று சுருதி சுத்தமாகப் பாடியபடி, நமது அறைக்குள் பிரவேசித்தார் நாரதர்.

வழக்கம்போல், அவருக்கு ஏலக்காய் சேர்த்த தேநீர் கொடுத்து உபசரித்தபடி, ‘`என்ன நாரதரே, நீர் பாடிக்கொண்டே வந்த பாடலைக் கேட்டால்,  ஸ்ரீரங்கத்திலிருந்து வருவதுபோல் தெரிகிறதே...’’ என்று கேட்டோம்.

‘`என்ன செய்ய, ஸ்ரீரங்கத்தில்தான் பிரச்னைக்கு மேல் பிரச்னையாக இருக்கிறதே...’’ என்றார் நாரதர்.

‘`அங்கே, அப்படி என்ன நடக்கிறது?’’

‘`ஒவ்வொன்றாகச் சொல்கிறேன் கேளும்.   ‘திருவரங்கம் கோயிலிலுள்ள இரண்டாவது பிராகாரத்தை பிரதட்சிணம் செய்து பெரிய பெருமாளை வழிபடுவதை காலங்காலமாகக் கடைப்பிடித்து வருகிறார்கள் பக்தர்கள். இதை ஒரு சம்பிரதாயமாக மட்டுமல் லாமல், அப்படி பிரதட்சிணம் செய்து, ஸ்ரீரங்க விமானத்தைத் தரிசனம் செய்வது, ஸ்ரீரங்க நாதரை தரிசிப்பதற்குச் சமம் என்று சிறப்பித்துச் சொல்வார்கள்.

அந்தப் பிராகாரத்தில்தான் ஸ்வாமி நம்பிள்ளை ஈடு காலட்சேபம் செய்த இடமும், ஸ்வாமி மணவாளமாமுனிகள் ஈடு காலட்சேபம் செய்த இடமும்,  ஸ்ரீபாஷ்ய காலட்சேபம் நடந்த இடமும் அமைந்திருக்கின்றன. மேலும் துலுக்க நாச்சியார், சேரகுலவல்லித் தாயார்,  ஸ்ரீகிருஷ்ணர்ஆகியோரின் சந்நிதிகளும் அமைந்திருக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick