விழாக்கள் விசேஷங்கள்!

சுவாமி விவேகானந்தர் நினைவு தினம்

இந்தியாவின் புகழை, இந்து மதத்தின் பெருமையை உலகெங்கும் பரவச் செய்த வீரத் துறவி, சுவாமி விவேகானந்தர். தம்முடைய ஞானக் கருத்துகளால் புதிய இந்தியாவை மலரச் செய்தவர். சுவாமிஜி, 1902-ம் ஆண்டு ஜூலை 4-ம் நாள் ஸித்தியடைந்தார். ஜூலை 4 புதன்கிழமையன்று சுவாமிஜியின் நினைவு தினம்.

அயன உற்சவம்

8.7.18 அன்று திருவண்ணாமலை, திருவையாறு ஆகிய தலங்களில் சிவபெருமானுக்கு அயன உற்சவம் ஆரம்பம். இந்த நாளில் சூரிய பகவானை வழிபட்டு வேண்டிக்கொண்டால், நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறும்; சகல சுபிட்சங்களும் உண்டாகும்.

முளைக்கொட்டு உற்சவ ஆரம்பம்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆடி மாத முளைக்கொட்டு விழா 15.7.18 அன்று (ஆனி மாதம் 32-ம் தேதி) தொடங்குகிறது. ஆடி மாத ஆயில்ய நட்சத்திரம் தொடங்கி பத்து நாள்களுக்கு விமர்சை யாக முளைக்கொட்டு உற்சவம் நடைபெறும். இந்த விழாவில் மீனாட்சி அம்மனுக்கு மட்டுமே கொடியேற்றம் நடைபெறும்.

மாணிக்கவாசகப் பெருமான் குருபூஜை

திருவாசகத்தால் ஈசனை உருகவைத்த அடியவர் மாணிக்கவாசகர். ஆனி மாதம் - மகம் நட்சத்திரத் திருநாள் (16.7.18), தில்லை ஆடல்வல்லானோடு கலந்த மாணிக்கவாசகரின் குருபூஜை தினம்.

அன்று அடியாரையும் ஆடல்வல்லானை வழிபட்டு அருள்பெறுவோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick