வேதம் சிறக்கட்டும்... லோகம் செழிக்கட்டும்!

எஸ்.கண்ணன் கோபாலன்

‘வேதத்தின் அர்த்தம் ரொம்ப உயர்வானது. அதைக் காப்பாற்ற வேண்டும் என்று சொன்னாலாவது, நவீன காலத்தவர்களுக்கு ஒப்புக்கொள்ளலாம் என்று தோன்றும். ஜன சமூகத்துக்கு அறிவு, கலை எல்லாம் வேண்டும். வேதம் நிறைய அறிவைத் தருகிற வஸ்து என்பதால், அதன் அர்த்தத்தைச் சிலர் சமூகம் முழுவதற்கும் பிரசாரம் பண்ணிக் கொண்டிருந்துவிட்டுப் போகட்டும் என்று சொல்லத் தோன்றும்.

ஆனால், சாஸ்திரம் இப்படிச் சொல்லாமல் ‘பிராமணனாகப் பட்டவன் வேதத்தின் சப்தத்தைக் காப்பாற்றிக்கொண்டிருக்கவேண்டும். ஜன சமூகம் முழுவதற்கும் அதைக் கொடுத்து ரக்ஷிக்க வேண் டும்’ எனச் சொல்கிறது’ என்று, வேதங்களைக் காப்பாற்றுவது பற்றியும், பிராமணர்கள் வேதங் களை அத்யயனம் செய்வதுடன் அத்யாபனம் செய்யவும் வேண்டும் என்பது பற்றியும் தெய்வத் தின் குரலாக மொழிந்திருக்கிறார்கள் காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள்.

மேலும், சமூக நன்மைக்காகப் பிராமணர்கள் வேதம் படிப்பது, மற்றவர்களுக்குப் போதிப்பது, சமூக நன்மைக்காக வேதங்களில் சொல்லப்பட்டி ருக்கும் யாக யக்ஞாதிகளைச் செய்துகொண்டிப்பது என இருந்துவிட்டால், அவர்களுடைய வாழ்க்கைத் தேவைகளை மற்றவர்கள் நிறைவேற்ற வேண்டும். அது சமூகத்தின் பொறுப்பு என்பதையும் காஞ்சி மகாபெரியவர் வலியுறுத்தியிருக்கிறார்.

அவரது முயற்சியின்பேரில் தேசத்தின் பல இடங்களில் வேத பாடசாலைகள் ஏற்படுத்தப்பட்டு, எண்ணற்ற மாணவர்கள் வேதங்களைப் பயின்று வருகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick