பெரியபாளையமாம் பேரரசி ஆலயமாம்!

மு.ஹரிகாமராஜ், படம்: ரவிகுமார்

`கரகத்தழகியம்மா
கண்ணபிரான் தங்கையரே,
கரகத்தின் மேலிருந்து
கருணை செய்வாய் தேவியம்மா.
பெரியபாளையமாம் பேரரசி ஆலயமாம்
பெரியபாளையத்து பவானியே
பெருங்கருணை வைப்பாய் அம்மா...’


ங்கிய குரலில் பம்பை, உடுக்கை, சிலம்புச் சத்தத்தோடு பாடல் ஒலித்துக் கொண்டிருக்க, பெரியபாளையம் ஆலயத்துக்குள் செல்கிறோம்.

கூட்டம்... கூட்டம்... பெருங்கூட்டம்! நம்மைத் தானாக நகர்த்திச் செல்லும் அளவு கூட்டம். ஞாயிற்றுக்கிழமை என்றாலே பெரியபாளையம் பவானி அம்மனைத் தரிசிக்கப் பல்வேறு பகுதி களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்துவிடுகின்றனர்.

ஆலயத்தின் முதல் பிராகாரம் எங்கும்  பக்தர்கள் பலவிதமான பிரார்த் தனைகளைச் செய்துகொண்டிருந்தனர்.  உடல் நோய்களைத் தணித்த அந்த வேப்பிலைக்காரிக்கு நேர்த்திக் கடனைச் சமர்ப்பிக்கும் விதமாக, சாரிசாரியாக ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் வேப்பிலை ஆடையைக் கட்டிக்கொண்டு ஆலயத்தை வலம் வந்துகொண்டிருந் தனர். அங்கப்பிரதட்சணம் செய்பவர் கள் தரையில் உருண்டபடியே வர, சிலர் தேங்காய்களை உருட்டியபடியும்  அங்கங்கே விழுந்து வணங்கியபடியும் வலம் வந்தார்கள்.

மேலும் தீச்சட்டி ஏந்தியபடியும், அடிப்பிரதட்சணம் செய்தவாறும் ஆலயத்தை வலம் வந்த பக்தர் களையும் காண முடிந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick