சங்கடங்கள் தீர்ப்பாள் சமயபுரத்தாள்!

அபூர்வ தொகுப்பு

*சமயபுரம் - சக்தி தலங்களில் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் உள்ள மாரியம்மன் திருத்தலங்களில் முதன்மையானதாக விளங்குவது. கண்ணனூர், விக்கிரமபுரம், மாகாளிபுரம் ஆகிய பெயர்களிலும் அழைக்கப்படும் இந்தத் தலம், திருச்சிக்கு வடக்கில் சமயபுரத்தின் கண்ணனூர் அருகில், பெருவளை வாய்க்காலின் கரையில் மகாசக்தி தலமாக விளங்குகிறது.

*திருச்சி - சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தூரத்திலுள்ள சமயபுரத்துக்கு நகரப் பேருந்துகள் அடிக்கடி உண்டு. தன்னைத் தேடிவரும் அடியவர்களுக்கு, உரிய காலத்தில் தேவையான வரங்களைத் தந்து காப்பவள் என்பதால், ‘சமயபுரத்தாள்’ என்று போற்றப்படுகிறாள் இங்கு அருளும் அம்பிகை.

*சோழ மன்னன் ஒருவன், தன் தங்கையைக் கங்க நாட்டு மன்னனுக்கு மணம் முடித்து, அவர்களுக்குச் சீதனமாக ஒரு கோட்டையையும் நகரத்தையும் அளித்தான். அதுவே கண்ணனூர். பிற்காலத்தில் பாண்டியர் படையெடுப்பால் கோட்டையும் நகரமும் அழிந்தன. அந்த இடம் பின்னர் வேப்ப மரக் காடாயிற்று.

*மயபுரம் மாரியம்மன், ஆதியில் ‘வைஷ்ணவி’ என்ற நாமத்தில் ஸ்ரீரங்கத்தில் குடி கொண்டிருந்ததாகக் கூறுவர். இந்த அம்பாள் மிக உக்கிரக் கோலத்தில் திகழ்ந்ததால், அங்கு அப்போதிருந்த ஜீயர் சுவாமிகள், இந்த அம்மனை வேறோர் இடத்தில் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick