ஆன்மிக துளிகள்

`அப்பனை நினைத்தேன்  இப்பனை வந்தது!’

கிருபானந்த வாரியார் சொற்பொழிவு செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்குப் புழுக்கம் ஏற்பட்டு வியர்த்துக் கொட்டியது. உடனே அடியார்கள் சிலர்,  வாரியார் சுவாமிகள் விசிறிக்கொள்ள வசதியாகப் பனை விசிறி ஒன்றைக் கொண்டு வந்து கொடுத்தனர்.

அதைக் கையில் வாங்கிக் கொண்ட வாரியார் சுவாமிகள் கூட்டத்தைப் பார்த்துச் சொன்னார்: “அப்பனை நினைத்தேன். இப்பனை வந்தது” என்று.

அவரது சமயோசிதப் பேச்சைப் பாராட்டிக் கூட்டத்தில்எழுந்த கரகோஷம் அடங்க வெகுநேரம் பிடித்தது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick