சந்திர கிரகணம்!

டி-11 (27.7.18) வெள்ளிக்கிழமை அன்று சந்திர கிரகணம். சந்திர கிரகணத்தைப் புண்ணிய காலமாகக் கொண்டாடச் சொல்கிறது தர்மசாஸ்திரம். ‘மனதுக்கும் சந்திரனுக்கும் சம்பந்தம் உண்டு’ என்கிறது வேதம்.

கிரகணத்தை ‘அலப்ய யோகம்’ -அதாவது நல்ல காரியங்களைச் செயல்படுத்த மிக அரிய சந்தர்ப்பம் என்று தர்மசாஸ்திரம் குறிப்பிடும். கிரகணகாலம் போனால் வராது. இது மனம் சம்பந்தப் பட்ட விஷயம் என்பதால், இந்தக் காலத்தில் முன்னோரது தர்ப்பணத்தைச் செயல்படுத்த அனுமதிக்கிறது தர்மசாஸ்திரம். சாதாரண வேளையில் செய்யும் கொடைகள் குறிப்பிட்ட பலனை மட்டும் அளிக்கும். ஆனால், கிரகணகாலத்தில் செய்யும் கொடை ஆயிரம் மடங்கு பலன் அளிக்கும். தான தர்மங்களுக்கு உகந்த வேளையாக அந்த நேரத்தைப் பார்க்கிறது தர்ம சாஸ்திரம்.

சந்திரன் பூமியில் நுழைகிறான் (பூச்சாயாம் ஸ்வக்ரஹணே ப்ரவிசதீந்து:) என்று ஜோதிடம் கூறும். பூமி, சந்திரனை மறைத்து விடுகிறது என்று பொருள். ராகு, சந்திரனை மறைக்கிறான் அல்லது விழுங்குகிறான் என்று புராணம் கூறும். எது எப்படி இருந்தாலும் மறைவது கண்கூடு. மறைவு அவர்களுக்கும், நமக்கும் இடையூறு. அது விலக நமது செயல்பாடுகள் திருப்பி விடப்பட வேண்டும்.

முன்னோரை வழிபடுதல், மனதை ஒருமுகப்படுத்தி தியானத்தில் இருத்தல், உயர்ந்த மந்திரங்களை மனதில் அசைபோடுதல். ‘நமசிவாய’ என்பதும் ‘நாராயணாய’ என்பதும் வேத மந்திரங்கள். அவற்றை மனனம் செய்தல், ஏழை எளிய மக்களுக்குக் கொடை அளித்தல் போன்றவற்றில் மனம் ஈடுபடும்போது இடையூறிலிருந்து மனம் வெளிவந்து விடும். புண்ணியமும் உண்டு.

உடல் தூய்மைக்குக் கிரகணம் துவங்கும் வேளையில் குளிக்க வேண்டும். உள்ளத் தூய்மைக்கு ஆன்மிக விஷயங்களில் மனதை நுழைக்க வேண்டும். கிரகணம் முடிவுற்ற பிறகும் சிறப்பு நீராடல் தேவை. அப்போதுதான் நமது கடமை முழுமை பெறுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick