மங்கலங்கள் அருளும் ஆடித்தபசு! - சிறப்புத் தொகுப்பு | Aadi Thabasu Festival at Sankarankovil - Sakthi Vikatan | சக்தி விகடன்

மங்கலங்கள் அருளும் ஆடித்தபசு! - சிறப்புத் தொகுப்பு

திருக்கயிலாயத்தில் மிக அற்புதமாக நடந்தேறியது ஒரு நிகழ்வு. `மிகப் பெரியவர் யார்... சிவனா, திருமாலா?' இந்தப் பேத புத்தி இல்லாமல், இந்தச் சக்திகள் இரண்டும் ஒன்றே என்று உலகுக்கு உணர்த்த  விரும்பினாள் அன்னை உமையவள். அதன் பொருட்டு சிவனாரை அணுகினாள்.

``ஸ்வாமி! தாங்களும்  ஸ்ரீநாராயணரும் பேதம் இல்லா மல் பொருந்தியிருக்கும் திருக் கோலத்தைக் காட்டியருள வேண்டும்!’’ என வேண்டினாள். சிவனாரும் ஒப்புக்கொண்டார்.

‘`தேவி! பூலோகத்தில் அகத்திய முனிவன் இருக்கும் பொதிகை மலையின் அருகிலுள்ள `புன்னை வனம்' தலத்தில், உனக்கு அந்த தரிசனம் கிடைக்கும். மகா சக்தி யான நீயும் அங்கே இடம் பெற வேண்டும்!’’ என்றார்.

சிவனாரின் சித்தப்படி பூலோகத்துக்குப் புறப்பட்டாள் அம்பிகை. அப்போது கயிலைவாழ் ரிஷிகளும் தேவ மாதர்களும் அன்னையிடம் வந்து, ‘`அம்மா... நீங்கள் செய்யும் தவத்தில் நாங்களும் பங்கு பெற வேண்டும்!’’ என வேண்டினர். அம்பிகையும் ஒப்புக்கொண்டாள்.

புன்னை வனத்தில் முனிவர்கள் புன்னை மரங்களாகித் தங்களது நிழலைப் பூமியில் பரப்பினர். தேவ மாதர்கள் பசுக் கூட்டமாகத் தோன்றி அன்னையின் தவத்துக்கு உதவினர். பசுக் குலத்தின் பணிவிடையால் மகிழ்ந்த அம்பிகை, அவற்றின் பெருமையை உலகுக்கு உணர்த்த, ‘ஆவுடையாள்’ எனும் திருநாமம் கொண்டாள் (ஆ-பசு).

‘கோ’(பசு)க்களின் பெயரை இணைத்து ‘கோமதி’ எனும் மற்றொரு திருநாமத்தையும் ஏற்றாள். விரைவில் அம்பிகைக்கு அருள்மிகு சங்கரநாராயணரின் தரிசனம் கிடைத்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick