விழாக்கள் விசேஷங்கள்!

ஜூலை -  17: தட்சிணாயன புண்ணிய காலம் ஆரம்பம்

டி மாதத்தின் முதல் நாளான இன்று முதல் சூரிய பகவானின் சஞ்சாரம் தெற்கு நோக்கி அமைகிறது. தெய்விக வழிபாட்டு பண்டிகைகளுக்கு இந்த ஆடி மாதமே தொடக்கக்  காலமாகப் போற்றப்படுகிறது. அம்மனைக் கொண்டாடும் இந்த மாதம் மங்கல மாதமாகவும் விளங்குகிறது. பூமாதேவி தோன்றிய மாதம் என்பதால் பூமியின் செழிப்புக்கும் இந்த மாதம் உகந்தது.

ஜூலை 21 - சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் குருபூஜை

சென்னை-செங்கல்பட்டு சாலையில், சிங்கபெருமாள் கோயிலி லிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவிலுள்ளது திருக்கச்சூர். சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளுக்கு ஈஸ்வரன் அன்னமிட்ட திருத்தலம் இது. இங்கே வரும் 21.7.18 சனிக்கிழமை அன்று சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் குரு பூஜை திருவிழா நடைபெறவுள்ளது. அன்று காலையில் அருள்மிகு விருந்திட்டீஸ்வரர், சுந்தரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும்,   மதியம் திருக்கயிலாய காட்சி வைபவமும் நடைபெறும். பக்தர்கள் கலந்துகொண்டு இறையருள் பெறலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick