ஒரே தலத்தில் ஒன்பது நரசிம்மர்கள்! | Avaniapuram Nava Narasimhar Temple - Sakthi Vikatan | சக்தி விகடன்

ஒரே தலத்தில் ஒன்பது நரசிம்மர்கள்!

மு.ஹரிகாமராஜ், படங்கள்: கா.முரளி

திருமகளும் கருடாழ்வாரும் சிம்ம முகத்துடன் காட்சி தரும் திருத்தலம். நவ நரசிம்மர்கள் அருளாட்சி செய்வதால், ‘தட்சிண அஹோபிலம்’ என்று போற்றப்படும் திருத்தலம்.  பிருகு மகரிஷியின் பிரார்த்தனைக்கு இரங்கி, ஐந்து திவ்ய தேசங்களில் எழுந்தருளியிருக்கும் திருக்கோலங் களில் பெருமாள் திருக்காட்சி அருளிய அற்புதத் தலம்...  இத்தனை மகிமைகளுக்கும் உரிய தலம் ஆவணி நாராயணபுரம். தற்போது ஆவணியாபுரம் என்று வழங்கப்படுகிறது.

பிரமாண்ட புராணம் பலவாறாக புகழ்ந்து பேசும் இந்தத் தலத்தைத் தரிசிப்போமா?

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியி லிருந்து ஆரணி செல் லும் சாலையில் அமைந்திருக் கிறது ஆவணியாபுரம். மலையடிவாரத்தில் அமைந்திருக்கும் அலங்கார வளைவில், சிம்ம முகத்துடன் கூடிய திருமகளை மடியில் இருத்திய கோலத்தில் சுதைச் சிற்பமாகக் காட்சி தருகிறார் நரசிம்மர். அங்கிருந்து மலைக்குச் செல்லும் படிகள் தொடங்குகின்றன.

30 படிகளைக் கடந்ததும் லட்சுமி நரசிம்மர் ஆலயத்தை தரிசிக்கலாம். மலையின் இடுக்கில் அமைந்திருக்கும் கருவறையில் மடியில் மகாலட்சுமி தாயாரை இருத்திய படி காட்சி தருகிறார் ஸ்ரீலட்சுமி நரசிம்மர். மெல்லிய வெளிச்சத்தில் நாம் என்னதான் முயன்றும் நரசிம்மரின் திருமுக தரிசனம் நமக்குக் கிடைக்கவில்லை. திருமண் காப்பு மட்டும்தான் காட்சி தருகிறது. அவருடைய மடியில் அமர்ந்திருக் கும் லட்சுமி பிராட்டியும், சிம்ம முகத்துடன் காட்சி தருகிறார். தாயாரின் திருமுகம் சிம்ம முகமாக இருந்தாலும், கண்களில் அன்பும் கருணையும் பளிச்சிடுகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick