ஆலயம் தேடுவோம்: பரசுராமர் வழிபட்ட திருக்கோயில் பொலிவு பெறட்டும்!

எஸ்.கண்ணன் கோபாலன், படங்கள்: தே.அசோக்குமார்

ந்தப் பகுதி முழுவதும் வேலிகாத்தான் மரங்கள் அடர்ந்த காடு போல் மண்டிக் கிடந்தன. யாருமே அந்தப் பக்கம் செல்வதற்கு அச்சப்பட்டனர். இந்த நிலையில், சில வருடங்களுக்கு முன்பு சிலரின் பார்வையில் அந்தப் புதர்க் காடுகளுக்கிடையே சிவலிங்கம் ஒன்றின் பாணப் பகுதி மட்டும் தெரிந்தது. ‘அங்கே ஏதேனும் ஓர் ஆலயம் இருக்குமோ?’ என்ற சந்தேகத்தில், சிவனடியார்கள் சிலர் ஊர்மக்களுடன் இணைந்து, வேலிகாத்தான் மரங் களை வெட்டி அப்புறப்படுத்திவிட்டு, பாணம் தெரிந்த இடத்தை அடைந்தனர்.

பாணம் மட்டும் தெரிந்த சிவலிங்கத் திருமேனியின் முழு வடிவத்தையும் தரிசிக்க விரும்பி, பக்குவமாக மண்ணை அகற்றி சிவலிங்கத்தை வெளியே எடுத்தனர். சிவலிங்கத்தின் கோமுகத்துக்குப் பக்கத்திலேயே சண்டிகேஸ்வரரின் திருவடிவமும் இருப்பதைக் கண்டு பரவசப்பட்டனர். மற்றபடி வேறு எந்த தெய்வத் திருமேனிகளும் காணப்படவில்லை. தங்களுக்குக் காட்சி அருளிய சிவனாருக்கு ஓர் ஆலயம் அமைக்க விரும்பினர் ஊர் மக்கள். ஆனால், கோயிலின் வரலாறு பற்றி எதுவும் தெரியாததால், தேவ பிரஸ்னம் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்தனர். அப்போது தெரிய வந்த வரலாறு, ஸ்ரீபரசுராமருடன் தொடர்புடையது. தற்போது திருப்பணிக் கமிட்டி உறுப்பினர்களில் ஒருவரான கபிலன், நம்மிடம் தெரிவித்த அந்த வரலாறு...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick