மண்... மக்கள்... தெய்வங்கள்! - 8 | Village Gods - Chandiran worship - Sakthi Vikatan | சக்தி விகடன்

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 8

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
வெ.நீலகண்டன், படங்கள்: கா.முரளி, ஆர்.ராம்குமார்

காணிக்காரர்கள் மட்டுமல்ல... பெரும்பாலும் எல்லாப் பழங்குடி சமூகங்களுமே ஆவிகளை வணங்கும் வழக்கம் கொண்டவைதான். ‘தங்களுக் குக் காவலரணாக நிற்கும் மூத்தோன், இறந்த பிறகும் எதிரிகளிடமிருந்து தங்களைக் காப்பான்’ என்ற நம்பிக்கைதான் இதன் அடிப்படை.

கற்கள், மரங்களின் மூலம் அவர்கள் ஆவிகளை தரிசிக்கிறார்கள். காடுகளின் அங்கமாக இந்த மக்கள் ஒன்றி வாழ, இயற்கை சார்ந்த அவர்களது இந்த வழிபாட்டு முறையும் முக்கிய காரணமாக இருக்கிறது. நன்றியுணர்வும் அச்சவுணர்வும்தான் அவர்களின் இந்த வழிபாட்டை வடிவமைக்கின்றன.

காணிக்காரர்கள், தங்கள் தெய்வங்களின் பெயரைக்கூட உச்சரிப்பதில்லை. காரணம், பயமும் மரியாதையும்தான். காணிக்காரர்களின் மருத்துவமும் மந்திரமும் அமானுஷ்யமானவை. கீழ்நாட்டு மக்கள் இவற்றுக்காகவே காணிக் காரர்களை நாடி வருகிறார்கள். காணிக்காரர்களின் ஞானகுரு அகத்தியர். நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் மலைப்பகுதியில் வசிக்கும் காணிக்காரர் கள், தங்கள் குடியிருப்புகளில் பல்வேறு உருவ வேறுபாடுகளோடு திகழும் அகத்தியரை வழிபடு கிறார்கள். ‘தங்களுக்கு மந்திரங்களைப் போதித் ததும், தங்கள் வாழ்வை வடிவமைத்ததும் அகத்தியரே’ என்று நம்புகிறார்கள். அகத்தியரை முன்நிறுத்தும் பாடல்கள் பல இந்த மக்களிடம் புழக்கத்தில் இருக்கின்றன.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick