நாரதர் உலா - தேரழகு சீர் பெறுமா? | Naradhar Ula - Sakthi Vikatan | சக்தி விகடன்

நாரதர் உலா - தேரழகு சீர் பெறுமா?

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

`சென்ற வாரமே வந்திருக்கவேண்டிய நாரதர் இன்னும் வரவில்லையே...’ என்ற சிந்தனையில் நாம் ஆழ்ந்திருக்க, சந்தடி செய்யாமல் நம் அறைக்குள் பிரசன்னமானார் நாரதர். வந்தவருக்கு வேர்க்கடலை சுண்டலும், தேநீரும் கொடுத்தோம். எனினும் பேச்சுக்கொடுக்காமல் மெளனம் சாதித்தோம். அதற்கான காரணத்தை நாரதர் புரிந்துகொண்டிருக்கவேண்டும். ஆக, அவராகவே பேச்சைத் தொடங்கினார்.

‘`கோபித்துக்கொள்ளாதீரும். சென்ற வாரம் நாகப்பட்டினம் சென்றிருந்தேன். அதனால்தான் உம்மைச் சந்திப்பதற்குச் சற்றுத் தாமதமாகி விட்டது’’ என்று நமக்குச் சமாதானம் சொன்னவர், தொடர்ந்து பேசினார்.

‘`நாகையில் திருவடிக்குடில் சுவாமிகளைச் சந்தித்தேன். அவர் என்னிடம், அந்தணப்பேட்டை என்ற ஊரிலுள்ள அண்ணாமலையார் கோயில் குறித்தும் அங்கிருக்கும் தேரின் நிலைகுறித்தும் பகிர்ந்துகொண்டார். அதை அப்படியே சொல்கிறேன் கேளும்...’’ என்றவர், அதுபற்றி விவரிக்க ஆரம்பித்தார்.

‘‘அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள அந்தணப்பேட்டை அண்ணாமலையார் திருக்கோயில் பல ஆண்டுகளாகத் திருப்பணிகள்  மேற்கொள்ளப்படாமல் இருந்ததாம். தற்போது அறநிலையத்துறையின் அனுமதியுடன், உபயதாரர்கள் சிலர் சேர்ந்து திருப்பணிகளைத் தொடங்கியிருக்கிறார்கள். இது, மகிழ்ச்சியான விஷயம்தான் என்றாலும் அந்தக் கோயிலுக்கு உரிய தேரின் நிலை மிகப் பரிதாபமாக இருக்கிறது என்கிறார் திருவடிக்குடில்  சுவாமிகள். அத்துடன்  `நீங்கள் ஒருமுறை நேரில் போய் பார்த்தால் நன்றாக இருக்கும்’ என்றும் கேட்டுக்கொண்டார். நானும் நேரில் சென்று பார்த்தேன். சுவாமிகள் சொன்னது மிகச் சரியே...’’ என்றவர், மொபைலில் தான் எடுத்துவந்த தேரின் போட்டோக்களைக் காண்பித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick