கேள்வி பதில் - வீட்டில் மகாபாரதம் படிக்கலாமா? | Spiritual Questions and answers - Sakthi Vikatan | சக்தி விகடன்

கேள்வி பதில் - வீட்டில் மகாபாரதம் படிக்கலாமா?

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
’காளிகாம்பாள் கோயில்’ சிவஸ்ரீ சண்முக சிவாசார்யர்

? சென்னை கடற்கரை அருகில் ‘சென்னம்மன்’ என்ற பெயர் கொண்டிருந்த அம்பிகை, எப்படி காளிகாம்பாள் என்று பெயர் பெற்றாள்?

- சு.கௌரீதரன், பொன்னேரி


கடற்கரையின் அருகில் வாழும் மீனவப் பெருமக்கள், தங்களைக் காக்கும் தெய்வமாகத் திகழ்ந்த அம்பிகைக்குச் செந்தூரம் அளித்து வழிபட்டதாகவும், பின்னர்  `சென்னியம்மன்’ என்று போற்றப்பெற்ற அந்த சக்திதேவி... மராட்டிய மாமன்னர் சத்ரபதி சிவாஜி 1677-ம் வருடம் வந்து தரிசித்து வழிபட்ட பிறகு, ‘காளிகாம்பாள்’ என்று போற்றப்பெறுவதாகவும் செவிவழிச் செய்திகளும், ஆலயங்களில் பதிப்பிக்கப்பெற்ற நூல்களும் கூறுகின்றன. ஆனால், வரலாற்றுச் சான்றுகளான கல்வெட்டுகளோ, செப்புப் பட்டயங்களோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

மேலும், இந்தப் பராசக்தி முதலில் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் இருந்ததாகவும், பின்னர்  `மராத்தா டவுன்’ என்று அழைக்கப்பட்ட,  தற்போதுள்ள இடத்துக்கு இடமாற்றம் செய்யப் பட்டதாகவும் நம்பப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick