மண்... மக்கள்... தெய்வங்கள்! - 4

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
வெ.நீலகண்டன்

ழிபாட்டுத் தலங்களாக மட்டுமின்றி, காவல் கோட்டங்களாகவும், நீதிமன்றங்களாகவும் திகழ்வன கிராமத்துக் கோயில்கள்.

கிராம தேவதையின் முன்வைத்து குற்றங்கள் விசாரிக்கப்படும், சாட்சியங்கள் பெறப்படும், தண்டனைகளும் வழங்கப்படும். தங்கள் கிராமத்து மூப்பனின் முன்னிலையில் நின்று, எவரும் பொய் சொல்லத் துணிவதில்லை. எவருக்கும் அடங்கா மனிதனும் அவர் முன்னால் அடங்கி நின்று கைகூப்பி அடிபணிவான்; மனம் திறந்து உண்மை பேசுவான். ‘என்னை மன்னிச்சிடய்யா’ என்று மன்னிப்பு கேட்பான். தண்டனைகளை ஏற்றுக் கொள்வான்.

கிராமத்து மூப்பனின் முன் அமர்ந்து , தன்னை நிந்தித்தவர்களை, ஏமாற்றியவர்களை, தாக்கியவர் களை, துரோகம் செய்தவர்களைத் தண்டிக்குமாறு கைகூப்பி கோரிக்கை வைப்பார்கள் மக்கள். அரூபமாக அவர்களின் தலையைக் கோதி, ஆறுதல்படுத்தி, நம்பிக்கையூட்டி அனுப்புகிறார் அந்த மூப்பன். இது தலைமுறைப் பந்தம்.

நம்பிக்கையும் மரியாதையும்தான் கிராம தெய்வ வழிபாட்டின் அடித்தளங்கள். அவையே,  நியாயத்துக்கும் தர்மத்துக்குக் கட்டுப்பட்டு கிராமங்கள் செயல்படக் காரணமாக இருக்கின்றன. தங்களது செயல்பாட்டால் தங்கள் மூப்பனுக்கு எவ்வித சங்கடமும் நேர்ந்துவிடக்கூடாது என்று மக்கள் கவனமாக இருக்கிறார்கள். அதற்காக, தங்களுடைய சுக, துக்கங்கள், தேவைகளைக் கூட தவிர்க்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick