திருக்குறளில் சொல்லப்படாத நீதி! | Importance of not wasting food - Sakthi Vikatan | சக்தி விகடன்

திருக்குறளில் சொல்லப்படாத நீதி!

பாலு சத்யா

திருவள்ளுவருக்கு ஒரு பழக்கம் இருந்தது. சாப்பிடும்போது, இலைக்கு அருகே ஓர் ஊசியும் கிண்ணமொன்றில் சிறிது நீரும் இருக்க வேண்டும் அவருக்கு. வாசுகி அம்மையாருக்கு ஆரம்பத்தில் இந்தப் பழக்கம் ஆச்சர்யமாக இருந்தது. எதற்காக இப்படி வைக்கச் சொல் கிறார் என்று அவரிடம் கேட்கவும் தயக்கம்... அதோடு கணவரின் மேலிருந்த அபரிமிதமான பக்தி அந்தக் கேள்வியைக் கேட்கவிடாமல் தடுத்தது. ஒருநாள் நோய்வாய்ப்பட்டு படுக்கையி லிருந்தார் வாசுகி அம்மையார். அவர் கண்களில் ஏதோ ஓர் ஏக்கம் தென்பட்டதாகத் தோன்றியது வள்ளுவருக்கு.

``என்னிடம் எதையோ கேட்க வேண்டுமென்று நினைக்கிறாய். ஆனால், தயங்குகிறாய். என்ன விஷயம் வாசுகி... எதுவாக இருந்தாலும் கேள்!’’

வாசுகி அம்மையார், தயங்கித் தயங்கித் தன் சந்தேகத்தைக் கேட்டே விட்டார்.

``இவ்வளவுதானா? இதைக் கேட்பதற்கா இவ்வளவு நாள்களாகத் தயங்கிக் கொண்டிருந்தாய். உணவை வீணாக்கக் கூடாது என்பது நம் மரபார்ந்த வழக்கம். பருக்கைகள் இலையைத் தாண்டி விழுந்துவிட்டால் அதை அப்படியே சாப்பிட முடியாது அல்லவா? அப்படி விழுந்து விட்டால், ஊசியை எடுத்து, அதைக்கொண்டு பருக்கையைக் குத்தி, கிண்ணத்திலிருக்கும் நீரில் கழுவி, இலையில் போட்டுக்கொள்ளலாம். அதற்காகத்தான் உணவின்போது அவற்றை வைத்திருக்கிறேன்...’’ 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick