ஞானமலையில் மகா கும்பாபிஷேகம்! | Maha Kumbhabhishekam in Gnanamalai Murugan Temple - Sakthi Vikatan | சக்தி விகடன்

ஞானமலையில் மகா கும்பாபிஷேகம்!

வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

முருகப் பெருமானுடைய ஆறு திருமுகங்களில், ஆறாவது திருமுகம் உலகமெல்லாம் இன்பவாழ்வு பெறுவதற்காக ‘வள்ளி’யோடு மகிழ்ந்து விளங்கு கிறது. மற்ற ஐந்தும்... ஒளி தரும் முகம், அன்பர்க்கு அருளும் முகம், வேள்வி காக்கும் முகம், ஞானம் உணர்த்தும் முகம் மற்றும் வீரம் விளைவிக்கும் முகமாகத் திகழ்வதாக நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் வர்ணித்திருக்கிறார்.

‘ஒருமுகம் குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின் மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே’ என்று அவர் பாடும்போது, தேவமகளாகிய தேவயானையுடன் அமர்ந்து மகிழும் ஆண்டவன், குறவர் மடமகள் என்று எண்ணாமல், அவளுடனும் மகிழ்ந்த  முருகனின் பரம கருணையைக் காட்டுகிறது. மடவரல் வள்ளியொடு அவர் மகிழ்ந்து அமர்ந்திருப்பது, உலகத்தார் தக்க வாழ்க்கைத் துணையுடன் இல்லற இன்பம் பெற்று அறவாழ்வு நடத்தவேண்டும் என்பதற்காகத்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick