திருமுறைகளுக்கு ஒரு திருக்கோயில்!

சி.வெற்றிவேல், படங்கள்: குருஸ்தனம்

தேனினும் இனிய தமிழ்ப் பாக்களால் கயிலைநாயகனின் புகழையும் கருணைத் திறனையும் பாடிப் பரவிய அருளாளர்களின் நூல்களே பன்னிரு திருமுறைகள் என்று போற்றப்படுகின்றன. இந்தப் பன்னிரண்டு திருமுறைகளே சைவர்களின் வேதங்களாகவும் விளங்குகின்றன. காலப்போக்கில் தேவாரப் பாடல்கள் அடங்கிய சுவடிகள் தில்லையம்பலத்தான் திருக்கோயிலிலிருந்த ஓர் அறைக்குள் வைத்துப் பூட்டப்பட்டுவிட்டதுடன், அவற்றுள் பல ஓலைச் சுவடிகள் கரையான்களின் கடும்பசிக்கும் இரையாகிவிட்டன.

ஆனால், நாம் செய்த புண்ணியத்தின் பலனாக, நம்பியாண்டார் நம்பி மூலம் ராஜராஜ சோழன் அவற்றை மீட்டெடுத்தார். மேலும் சிவபெருமானின் புகழினைப் பாடும் மற்ற பாடல்களையும் திரட்டி நம்பியாண்டார்நம்பி மூலம் 11 திருமுறைகளாகத் தொகுத்து வைத்தார். பின்னர், சேக்கிழார் இயற்றிய பெரியபுராணமும் சேர்ந்துகொள்ள, இந்த ஞானநூல்கள் பன்னிரு திருமுறை களாக, அடியார் பெருமக்களால் போற்றப்பட்டும் பாடப்பட்டும் வருகின்றன.

சிவபெருமானின் சந்நிதியில் பாடப்படும் பன்னிரண்டு திருமுறைகளையே இறைவனாகப் பாவித்து, பன்னிரண்டு திருமுறைகளுக்கும், ‘திருமுறை செப்பறைத் திருக்கோயில்’ என்ற பெயரில் ஓர் ஆலயம் அமையவிருப்பதாகவும், அதற்கான பணிகள், விருத்தாசலத்தைச் சேர்ந்த ‘அறுபத்து மூவர் திருப்பணி அறக்கட்டளை’ என்ற அமைப்பின் சார்பாகத் தொடங்கப்பட்டி ருப்பதாகவும் அன்பர் ஒருவர் நம்மிடம் தெரிவித்தார். இது தொடர்பாக அறக்கட்டளையின் செயலாளரான சங்கர் எனும் அன்பரைச் சந்தித்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick