ஆலயம் தேடுவோம்: மகான்கள் போற்றிய சேஷத்திரத்தில்...

எஸ்.கண்ணன் கோபாலன், படங்கள்: க.சதீஷ்குமார்

ஞ்சை நாயக்க மன்னர்களின் காலத்தில் சேவப்ப நாயக்கரின் கடைசிக் காலத்திலிருந்து ரகுநாத நாயக்கர் காலம் வரை மூன்று மன்னர் களின் அமைச்சராகவும், ராஜகுருவாகவும் புகழ்பெற்று விளங்கியவர் கோவிந்த தீட்சிதர். புனிதத்துவம் வாய்ந்த தலங்களில் வேத விற்பன் னர்களைக் குடியேற்றி, மக்களின் நன்மைக்காக யாகங்கள் செய்து வரச் செய்த பெருமைக்கு உரியவர் கோவிந்த தீட்சிதர்.

வேதவிற்பன்னர்களுக்காக பல ஏக்கர் கணக் கில் நிலங்களையும் ஊர்களையும் மானிய மாகவும் வழங்கினார். அந்த வகையில், வேதவிற் பன்னர்களுக்குக் கோவிந்த தீட்சிதர் மானியமாக வழங்கிய ஊர்களில் ஒன்று, காவிரியின் கிளை ஆறான வீரசோழன் ஆற்றின் கரையில் அமைந் திருக்கிறது.

1814 முதல் 1857-ம் ஆண்டு வரை காஞ்சி மடத்தின் பீடாதிபதியாக இருந்த சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், கோவிந்த தீட்சிதரின் வம்சத்தில் வந்தவர்தான். இந்த ஊருக்கு மற்றொரு சிறப்பும் உண்டு. நடமாடும் தெய்வமாக பக்தர்களால் போற்றப்பட்ட காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் இந்த ஊருக்கு விஜயம் செய்திருக்கிறார் என்பதுதான் அந்தச் சிறப்பு.

மகா ஸ்வாமிகள் ஊர்மக்களுக்கு ஆசியுரை வழங் கியபோது, ‘உலகத்துக்கு உணவு படைக்கும் உன்னதமான தொழிலை விட்டுவிடாமல் செய்து வாருங்கள். சுத்தமான காற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையும் இங்குதான் கிடைக்கும். உயிர்களுக்கு  உணவு படைப்பதும் இறைப்பணிதான்’ என்று அருளினாராம். அன்று அவர் அறிவுறுத்தியபடியே, இன்றைக்கும் பல தலைமுறைகளைக் கடந்தும், இங்குள்ளவர்களில் பெரும்பாலானோர் தங்களை விவசாயத்தில் ஈடுபடுத்திக் கொண்டிருப்பதை நம்மால் நேரில் காணமுடிந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick