முயலுக்கு எத்தனை கால்?

பாலு சத்யா, ஓவியம்: ரவி

வர் நகரத்திலேயே மிகவும் புகழ்பெற்ற டாக்டர். அன்று ஞாயிற்றுக்கிழமை. முதல் கேஸே டாக்டரை கிறுகிறுக்க வைத்தது.

``என்னப்பா பிரச்னை?’’

``ஒண்ணும் இல்ல டாக்டர்.  நான் செத்துப் போயிட்டேன் அவ்வளவுதான்’’ என்றான் வந்தவன். 

டாக்டர் அசந்துபோனார். அவனை உற்றுப் பார்த்தார். மன நோயாளி மாதிரியும் தெரியவில்லை. நேர்த்தியாக ஆடை அணிந்திருந்தான். பளிச் சென்றிருந்தது முகம். `சரி... இவனை இவன் ரூட்டிலேயே அணுகவேண்டும்’ என்று முடிவு செய்துகொண்டார்.

``இங்கே பாருப்பா. நான் உனக்கு எதிர்ல உட்கார்ந்திருக்கேன். அது தெரியுதா?’’

``தெரியுது டாக்டர்.’’

``நானும் நீயும் பேசிக்கிட்டிருக்கோம். அப்பிடித்தானே?’’

``ஆமா.’’

``என் முன்னாடி உட்கார்ந்திருக்கிற நீ எப்படி செத்துப் போயிருக்க முடியும்? நீ சாகலை. உயிரோடதான் இருக்கே. புரிஞ்சுதா?’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick