குரு பார்க்க கோடி நன்மை! | Astrological predictions - Sakthi Vikatan | சக்தி விகடன்

குரு பார்க்க கோடி நன்மை!

அதிசாரம் வக்கிர சஞ்சாரம் பலன்கள்... பரிகாரங்கள்!

சென்ற வருடம் 2.9.17 (ஆவணி 17-ம் நாள்), சனிக்கிழமையன்று கன்னி ராசியில் இருந்து துலாம் (சித்திரை 3-ம் பாதம்) ராசிக்குள் பிரவேசித்த குருபகவான், தற்போது அதிசாரத்திலும் வக்கிரத்திலுமாக செல்ல இருக்கிறார்.   

14.2.18 முதல் 10.4.18 வரை: விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசாரம்.

7.3.18 முதல் 3.7.18 வரை: விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குருபகவான் வக்கிர கதி.

அதென்ன அதிசாரம், வக்கிரம்? இதுபற்றி அறியுமுன், கிரகங்கள் ராசிகளில் பயணிக்கும் கால அளவைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு ராசியில் கிரகங்கள் சஞ்சரிக்கும் கால அளவு:

சூரியன் - ஒரு மாதம்; சந்திரன் - இரண்டேகால் நாள்கள்; செவ்வாய் - 45 நாள்கள்; புதன் - சுமார் ஒரு மாதம்; குரு - ஒரு வருடம்; சுக்கிரன் - ஒரு மாதம்; சனி - இரண்டரை வருடம்; ராகு -கேது - ஒன்றரை வருடம். இப்படி ஒரு கிரகம் ஒரு ராசியில் சஞ்சரிக்கும் காலத்தில், குறிப்பிட்ட காலத் துக்கு முன்பாகவே, தான் சஞ்சரிக்கும் ராசியிலிருந்து முன்னோக்கிச் சென்றால், அது அதிசாரம். தான் சஞ்சரிக்கும் ராசியிலிருந்து பின்னோக்கிச் சென்றால், அது வக்கிரம் எனப்படும்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick