விளக்கின் வடிவில் வீடுதேடி வரும் பெருமாள்! | Theerthavari in Thirukoshtiyur temple - Sakthi Vikatan | சக்தி விகடன்

விளக்கின் வடிவில் வீடுதேடி வரும் பெருமாள்!

பிரேமா நாராயணன் - படங்கள்: எஸ்.சாய்தர்மராஜ்

மாசி மாதம் வந்துவிட்டால் பல க்ஷேத்திரங்களில் பிரம்மோற்சவங்களும் திருவிழாக்களும் களைகட்டிவிடும். அப்படி விழா கோலாகலம் களைகட்டும் வைணவத் தலங் களுள் குறிப்பிடத் தக்கது, திருக்கோஷ்டியூர் என வழங்கப்பெறும் திருக்கோட்டியூர்.  108 திவ்யதேசங்களுள் ஒன்றான இத்தலத்தில், தெப்பமும் திருவிழாவுமாக நடைபெறும் பிரம்மோற்சவத்தைத் தரிசிக்க, சுற்றுப்பட்டு ஊர்களிலிருந்தும் வெளியூர்களிலிருந்தும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்! விழாவையொட்டிய விளக்குப் பிரார்த்தனையும் இத்தலத்தின் தனிச் சிறப்பம்சமாகத் திகழ்கிறது!  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick