ராசிபலன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
பிப்ரவரி 27 முதல் மார்ச் 12-ம் தேதி வரை‘ஜோதிட ரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன்

அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம் 

மேஷம்

பணப்புழக்கம் அதிகரிக்கும்


பூர்வ புண்ணியாதிபதி சூரியன் லாப வீட்டில் நிற்பதால், எதிலும் வெற்றி பெறுவீர்கள். மேல்நிலை அரசியல்வாதிகளின் தொடர்பு கிடைக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். பணபலம் உயரும். புதனும், சுக்கிரனும் சாதகமாக இருப்பதால், இதுவரை மனக்கசப்பால் ஒதுங்கி இருந்த உறவினர்கள், இனி வலிய வந்து பேசுவார்கள். நண்பர்கள், விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தங்க ஆபரணம் வாங்குவீர்கள்.
வியாபாரத்தில் புகழ்பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்வீர்கள். பற்று - வரவு உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு, அதிகாரிகள் மத்தியில் செல்வாக்கு கூடும். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துகொள்வார்கள். கலைத் துறையினர் விமர்சனங் களையும் தாண்டி முன்னேறுவார்கள்.

புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் தருணம் இது.


கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

ரிஷபம்

தொட்டது துலங்கும்


புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். நட்புவகையில் நல்ல செய்திகள் வந்துசேரும். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் உண்டு. சூரியன் 10-ம் வீட்டில் பலம் பெற்றிருப்பதால், சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். திருமணம், சீமந்தம் போன்ற சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.

அரசு காரியங்கள் விரைந்து முடியும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். நீங்கள் முனைப்போடு துவங்கும் காரியங்களில் ஜெயம் உண்டாகும். நினைத்தது நிறைவேறும். கல்வியாளர்கள், அறிஞர்கள் ஆகியோரது நட்பும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். வியாபாரத்தில், தேங்கிக்கிடந்த சரக்குகள் அனைத்தும் விற்றுத்தீரும். வேலையாட்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படுவார்கள்; அவர்களது ஆதரவு பரிபூரணமாகக் கிடைக்கும். உத்தியோகத்தில், எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சம்பளம் உயரும். கலைத் துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் கிட்டும்.

எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும் தருணம் இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick