குறை தீர்க்கும் கோயில்கள் - 20 - சாமுண்டீஸ்வரி சந்நிதியில் விஷக்கடிக்கு வேர் சிகிச்சை!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
டாக்டர் ஜெயம் கண்ணன் - படங்கள்: க.சதீஷ்குமார்

‘ஆவின் மேவிய ஐந்தமர்ந்து ஆடுவான்
தூவெண் ணீறு துதைந்த செம்மேனியான்
மேவநூல் விரிவெண்ணியின் தென்கரைப்
பூவனூர் புகுவார் வினை போகுமே!’

தி
ருநாவுக்கரசரால் இப்படிப் பாடப்பெற்ற தேவாரத் திருத்தலம் பூவனூர் என்ற திருபூவனூர். திருஞானசம்பந்தராலும் பாடப்பெற்றுள்ள தலம் இது. தேவாரப் பாடல்பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில், இது 103-வது திருத்தலம். நறுமணம் வீசும் வண்ண மலர்கள் பூத்துக்குலுங்கும் வனங்கள் நிறைந்த இடமாக இருந்தபடியால், முற்காலத்தில் ‘புஷ்பவனம்’ என்ற பெயரும் வழங்கப்பட்டிருக்கிறது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick