கேள்வி பதில் - பஞ்ச பூதங்களுக்கு வழிபாடு உண்டா? | Spiritual Questions and Answers - Sakthi Vikatan | சக்தி விகடன்

கேள்வி பதில் - பஞ்ச பூதங்களுக்கு வழிபாடு உண்டா?

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

? இறை வழிபாட்டில் தாமரை மலரே அதிக முக்கியத்துவம் பெறுகிறது.  இறைவனின் பாதங்களை `பாதக் கமலம்' என்றே இலக்கியங்கள் சிறப்பிக்கின்றன. ஏன் அப்படி?

- வசந்தா நாராயணன், சென்னை-4


நூறு இதழ்கள் கொண்ட தாமரை, ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை என்று புஷ்பங்களில் தாமரைக்குத் தனிச் சிறப்புண்டு (ஸஹஸ்ர பத்ரம் கமலம் சதபத்ரம் குசேசயம்). செந்தாமரையின் அழகு எல்லோரையும் கவர்ந்துவிடும். காலையில் கதிரவனின் ஸ்பரிசத்தில் மலர்ந்த தாமரையில் லட்சுமி வாசம் செய்கிறாள். சிவப்பு, மென்மை, அழகு மூன்றும் ஒருங்கே அமைந்த தாமரைப் பூவை இறைவனின் பாதங்களுக்கு ஒப்பிடுவது தனிச் சிறப்பு. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick