சுக்கிர யோகம் யாருக்கு?

சுகபோகங்கள் அருள்வார் சுக்கிரன்!

சு
க்கிரனை ஆங்கிலத்தில் ‘வீனஸ்’ என அழைப்பார்கள். சூரியனுக்கு அருகில் புதனும் அதற்கடுத்து சுக்கிரனும் இருக்கின்றன. சுக்கிரனை ‘வெள்ளி’ என்றும் கூறுவார்கள். அதிகாலையில், சூரிய உதயத்துக்கு முன்பாக வானில் தோன்றும் கிரகம்தான் சுக்கிரன். நம் கிராமப்புறங்களில், ‘வெள்ளி முளைக்கும் வேளையில் வயலை நோக்கிப் புறப்பட்டான்’ என்று கூறுவார்களே, அந்த வெள்ளிதான் சுக்கிரன். 

சூரியனிலிருந்து 6 கோடியே 70 லட்சம் மைல் தொலைவில் சுக்கிரன் இருக்கிறது. இந்தக் கிரகம் ஜோதிடக் கணக்குப்படி, 12 ராசிகளையும் சுற்றி வருவதற்குக் கிட்டத்தட்ட ஏழரை மாதங்கள்... அதாவது, 225 நாள்கள் ஆகும். இது, தன்னைத்தானே சுற்றிக் கொள்வதற்கு 23:30 மணி நேரமாகிறது. 

சுக்கிரனுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்: வெள்ளி, கவி, பிருகு, பார்க்கவன், அசுரகுரு, புகர், களத்திரக்காரகன், நேத்திரன், சுகி, போகி மற்றும் மழைக்கோள்.

சுகபோகங்கள் அருள்வதில் சுக்கிர பகவானின் பங்களிப்பு அதிகம். ஒருவருக்கு ஜாதகத்தில் சுக்கிர தசை ஆரம்பிக்கும் காலத்தில், பூர்வஜன்ம புண்ணியமும் சேர்ந்திட, அந்த அன்பர் அதிஅற்புதமான பலன்களை அனுபவிப்பார். அதேபோல், சுக்கிரயோக ஜாதகக்காரர்களும்  சகல வளங்களையும் பெற்று செளபாக்கியத்துடன் வாழ்வார்கள். சரி! எல்லோருக்குமே சுக்கிரதசையைச் சந்திக்கும் வாய்ப்பும், சுக்கிரயோக வாழ்க்கையும் கிடைத்துவிடுமா என்றால், `இல்லை' என்றே சொல்ல வேண்டும்.

பூர்வ ஜன்ம பலாபலன்களுக்கு ஏற்பவே இப்பிறவிக்கான வாழ்க்கை அமைகிறது. அவ்வகையில், ஜாதகத்தில் சுக்கிர பலம் இல்லாதவர்கள், வாழ்வில் சுக்கிர திசையையே சந்திக்க இயலாதவர்கள் என்ன செய்யலாம்?

அவர்களுக்கு இறை வழிபாடு கைகொடுக்கும். திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்பார்கள். அதற்கேற்ப, இப்பிறவியில் மேலும் பாவ காரியங்களுக்கு ஆளாகாமல், புண்ணியங்கள் சேரும்படியாக அறவழியில் வாழ வேண்டும். வழிபாடுகளால் தெய்வபலம் சேரும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். தெய்வ அனுக்கிரகத்தால், பூர்வஜன்ம கர்மவினைகளுக்கான அசுப பலன்கள் படிப்படியாகக் குறையும்போது, சுபிட்ச பலன்களும் சுக்கிரயோக வாழ்வும் கைகூடி வரும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick