ராசிபலன் | Astrological predictions - Sakthi Vikatan | சக்தி விகடன்

ராசிபலன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஏப்ரல் 24 முதல் மே 7 வரை‘ஜோதிட ரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன்

அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்

மேஷம்

சு
க்கிரனின் ஆதரவு உங்களுக்கு இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வாகன வசதி பெருகும். திருமணம் கைகூடும். வீட்டை விரிவுப்படுத்திக் கட்டுவீர் கள். வங்கிக் கடனுதவி கிடைக்கும். சொத்துப் பிரச்னை தீரும். சூரியன் ராசிக்குள் நிற்பதால் டென்ஷன் அதிகரிக்கும். ரத்த அழுத்தம் கூடும். வேலைப்பளு கூடும். உடல்நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளுங் கள். அரசு காரியங்களில் அலட்சியம் வேண்டாம். 

புதன் 12 -ம் வீட்டில் நிற்பதால், பயணங்கள் அதிகரிக்கும். பழைய கடன்களைத் தீர்க்க வழி கிடைக்கும். 30-ம் தேதி முதல் செவ்வாய், கேதுவுடன் சேர்ந்து 10 -ம் வீட்டில் நிற்பதால், திடீர் பணவரவு உண்டு. வெளிவட்டாரத்தில் புதியவர்கள் அறிமுகமாவார்கள். பழைய வீட்டை விற்றுவிட்டு, புது இடம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள், பங்குதாரர்களால் மறைமுகப் பிரச்னைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் பணிகளைப் போராடி முடிப்பீர்கள். கலைத் துறையினரின் கலைநயமிக்க படைப்புகள் பட்டித்தொட்டியெங்கும் பேசப்படும்.

சாதுர்யமான பேச்சால் சாதிக்கும் நேரம் இது.


கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

ரிஷபம்

ங்களின் தனம், பூர்வ புண்ணியாதிபதியாகிய புதன் லாப வீட்டில் நிற்பதால், இழுபறியான வேலைகள் உடனே முடியும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். நண்பர்கள் உதவுவார்கள். உறவினர்கள் வீட்டு விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும். பூர்வீகச் சொத்துகளைச் சீர்படுத்துவீர்கள். வி.ஐ.பி-கள் உங்களின் நேர்மையைப் புரிந்துகொண்டு பாராட்டுவார்கள். 

ராசிநாதன் சுக்கிரன் ஆட்சி பெற்றிருப்பதால் அழகும், இளமையும் கூடும். புது முயற்சிகள் கைகூடி வரும். பணவரவு அதிகரிக்கும். மனைவியின் உடல்நிலை சீராகும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். ஷேர் மார்க்கெட்டில் நல்ல லாபம் கிடைக்கும். சகோதரிக்கு விரைவில் திருமணம் முடியும். 30 - ம் தேதி முதல் செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து 9-ம் வீட்டில் அமர்வதால், சகோதரர்கள் உங்களின் வேலைகளைப் பகிர்ந்துகொள்வார்கள். சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வழக்கில் வெற்றிபெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். வேலையாட்கள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். அஷ்டமத்துச் சனி தொடர்வதால், உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் வீண் மோதல்கள் வரும். கலைத் துறையினருக்கு கலைத்திறன் வளர்ச்சி பெறும்.

விடாமுயற்சியால் வெற்றிபெறும் வேளை இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick