சுவாமிமலையில் படிபூஜை! | PadiPooja in Swamimalai Murugan Temple - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (08/05/2018)

சுவாமிமலையில் படிபூஜை!

கே.குணசீலன்

‘குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் குடியிருப்பான்’ என்று சொல்வதற்கு ஏற்ப, அழகு முருகன் குடிகொண்டிருக்கும் திருக்கோயில்களில் சுவாமிமலைக்கு தனிச் சிறப்பு உண்டு. தந்தைக்கு குருவாகி, தமிழுக்குப் பொருளாகி முருகன் குடிகொண்ட சுவாமிமலை கோயிலுக்கு, 60 படிகளில் ஏறிச் செல்ல வேண்டும். இந்த 60 படிகளுமே தமிழ் ஆண்டுகளின் பெயர்களில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்க் கடவுளை தரிசிக்க நாம் கடந்து செல்லும் படிகளுக்கு தமிழ் ஆண்டுகளின் பெயர்களை அமைந்திருப்பது சிறப்புதானே!

முருகப்பெருமானின் சந்நிதி நோக்கி நம்மை மேலே ஏற்றிவிடும் அந்தப் படிகள்  மிகவும் புனிதம் பெற்றவை. மகரிஷிகள், முனிவர்கள், மகான்கள் ஆகியோரின் திருவடிகள் பதிந்த மகிமை கொண்டவை. அதுமட்டுமல்ல, பல்லாயிரக் கணக்கான பக்தர்கள், முருகனடியார்களின் பாதங்கள் பட்ட மகத்துவமும் அந்தப் படிகளுக்கு உண்டு. அதனால்தான் மலையின்மீது முருகன் கோயில் கொண்டிருக்கும் தலங்களில் முருகன் அடியவர்களால் ‘படி பூஜை’ வெகு சிறப்பாக நடத்தப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் 30-ம் தேதி சுவாமிமலையில் படி பூஜை விமர்சையாக நடைபெற்றது. ‘வான் பொய்ப்பினும் தான் பொய்யா' காவிரியே பொய்த்துப் போய், விவசாயிகள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில், விவசாயி களின் நலனுக்காக, ‘சிறுவாபுரி முருகன் அபிஷேகக் குழு’ மற்றும் ‘சண்முகானந்த சபா’ ஆகிய அமைப்பினர் இணைந்து இந்த `படி பூஜை' வைபவத்தை நடத்தினர். சுவாமி மலையில் தொடர்ந்து 28 வருடங்களாக இவர்கள் படி பூஜை நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close