சித்திரை சிறப்பு வழிபாடு!

துரை சித்திரைத் திருவிழாவின் கோலாகலத்துக்கு  இவ்வருடம் மேலும் வலு சேர்த்தது, சக்தி விகடன் மற்றும் காளீஸ்வரி ரீஃபைனரி தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனம் இணைந்து வழங்கிய சித்திரை சிறப்பு வழிபாடு!

மீனாட்சி திருக்கல்யாணம், கள்ளழகர் வைபவம் ஆகியவற்றின் புராணச் சிறப்பு களை பக்தர்களுக்கு எடுத்துச்சொல்லும் விதமாகவும், உலக நன்மைக்கான பிரார்த் தனையாகவும், மதுரை - அருள்மிகு மதனகோபால ஸ்வாமி திருக்கோயிலில் சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

26.4.18 அன்று மாலை 3 மணியளவிலேயே நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரண்டுவிட்டார்கள். திருக்கோயில் நிர்வாகிகளின் வழிகாட்டலுடன் வழிபாட்டுக்கான முன்னேற்பாடுகள் வெகு சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தன. மாலை நான்கு மணியளவில் சக்தி விகடன் வாசகி ஒருவர் திருவிளக்கு ஏற்றிவைக்க, இனிதே துவங்கியது வைபவம். 

`‘வாழ்ந்தாலே முக்தி தரும் தலம் மதுரை. சித்திரைத் திருவிழாவையொட்டி, இங்கு நிகழும் இந்த சிறப்பு கூட்டு வழிபாடு, அனைத்து நன்மைகளையும் அருளும் என்பதில் சந்தேகமேயில்லை’’ என்று தொடங்கி,  மீனாட்சி திருக்கல்யாணம், கள்ளழகர் மகிமைகள் குறித்து மிக அற்புதமான விளக்கங்களை அளித்தார் `இலக்கியமேகம்' ஸ்ரீநிவாசன். தொடர்ந்து பேசிய சொற்பொழிவாளர் விசாலாட்சி, தீப மகிமை, ஐவகை எண்ணெய் ஊற்றி விளக்கேற்றுவதன் சிறப்புகள் குறித்து எடுத்துரைத்தார். நிறைவாக மகா ஆராதனை யுடன் பூர்த்தியானது வழிபாடு.

பூஜையின் நிறைவில் வந்திருந்த வாசகியர் அனைவருக்கும் லட்சுமி விளக்கு வழங்கப்பட்டது. நெஞ்சம் நிறைந்த பூரிப்போடு, சக்திவிகடனுக்கும் காளீஸ்வரி ரீஃபைனரி தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனத்துக்கும் மனதார நன்றி கூறி விடைபெற்றனர் வாசகர்கள்.

– அருண் சின்னதுரை,

படங்கள்:  வி.சதீஷ்குமார், பா.ராகுல்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!