விழாக்கள் விசேஷங்கள்!

குடமுழுக்குத் திருவிழா!

திருவள்ளூர் மாவட்டம்  பெரியபாளையத்துக்கு அருகில் கொசவன்பேட்டையில் அமைந்துள்ளது, ஸ்ரீகாமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீபர்வதீஸ்வர ஸ்வாமி திருக்கோயில்.

ஆரண்ய நதி (ஆரணி ஆறு) தீரத்திலுள்ள இந்தத் திருக்கோயிலில் கடந்த 4-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. நூதன சனீஸ்வரர், நவகிரக சந்நிதி, பரிவார தேவதைகளின் சந்நிதிகள் என அழகுடன் காட்சியளிக்கும் இந்த ஆலயத்துக்குச் சென்று வழிபட்டால் திருக்காளத்தி, திருமயிலை ஆகிய தலங்களை ஒருசேர தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள் பெரியோர்கள். 


அக்னி நட்சத்திரம் ஆரம்பம்

அக்னி பகவானின் உக்கிர காலம் என்றும் பசியாறும் காலம் என்றும் அக்னி நட்சத்திரக் காலத்தைக் குறிப்பிடுவார்கள். கடந்த 4-ம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரக் காலம் 21 நாட்கள் நீடித்திருக்கும். சுவேதகி மன்னர் தொடர்ந்து 12 வருடங்கள் நடத்திய யாகத்தால், அதிக நெய்யை உண்ண நேரிட்ட அக்னி பகவானுக்கு மந்த நிலை ஏற்பட்டதாம். காண்டவ வனத்தை எரித்து உண்டால்தான் அக்னியின் மந்த நிலை நீங்கும் என்று ஆலோசனை சொல்லப்பட்டது. அதன்படி  அக்னி பகவான் காண்டவ வனத்தை எரித்து மந்த நிலையைப் போக்கிக்கொண்ட  காலம் இது என்று சொல்லப்படுகிறது. அக்னி நட்சத்திரக் காலத்தில் சுப காரியங்களைச் செய்யக்கூடாது என்பது ஆன்றோர் வாக்கு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick