முருகனுக்கு மூன்று தலங்கள்

வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

ந்தத் தமிழ்க் கொண்டல் அருணகிரிநாத ஸ்வாமிகள், திருப்புகழ் பாடல்களால் போற்றிப்பரவிய முருகப்பெருமானின் திருத்தலங்கள் ஏராளம். அவற்றில் அடி, நடு, முடி என்று சிறப்பிக்கும்விதம், மூன்று திருத்தலங்களைப் போற்றி பாடியிருக்கிறார் அவர்.

கொந்து வார்குர வடியினும் அடியவர்
சிந்தை வாரிஜ நடுவினும் நெறிபல
கொண்ட வேதநன் முடியினும் மருவிய குருநாதா...
இந்த வரிகள் குறிப்பிடும் மூன்று தலங்கள் எவை தெரியுமா?
கொந்துவார் குர(வு) அடி - திருவிடைக்கழி.
அடியவர் சிந்தை வாரிஜ நடு - சிறுவாபுரி.
நெறிபல கொண்ட வேதநன் முடி - திருப்போரூர்.


வாழ்வில் ஒருமுறையேனும் இந்த மூன்று தலங்களுக்கும் சென்று  முருகப்பெருமானை வழிபட்டு வருவதால், விசேஷ பலன்கள் கிடைக் கும்; வாழ்க்கை வளமாகும் என்பார்கள் பெரியோர்கள். நாமும் தரிசிப்போமா, முத்தான இந்த மூன்று திருத்தலங்களை! பிறவிப்பேறு பெற, வாழ்வில் உயர்நிலையை அடைய இறைவனின் பாதக் கமலங் களைச் சரணடையவேண்டும் என்கின்றன ஞான நூல்கள். நாமும் முருகனின் திருவடியைப் போற்றும் வகையில், திருவிடைக்கழியிலிருந்து தரிசனத்தைத் தொடங்குவோம்.

கொந்துவார் குரவடி - திருவிடைக்கழி

`குரவடி' என்பது `குரா மரத்தின் அடி' என்பதாகும். முருகனின் திருப்பாதங்கள் பதிந்த புண்ணிய பூமி குராவடி எனும் திருவிடைக்கழி.

திருக்கடவூரிலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில், தில்லையாடி வழியாகத் திருவிடைக்கழி முருகன் கோயிலை அடையலாம். மயிலாடுதுறையிலிருந்து பேருந்து வசதி உள்ளது. காரைக்கால், தரங்கம் பாடி வழியாகவும் இத்தலத்தை அடையலாம்.

சூரபத்மன் மகன் இரண்யாசுரனை சம்ஹரித்த தால் ஏற்பட்ட தோஷம் நீங்கும் பொருட்டு, முருகப்பெருமான் இந்தத் தலத்தில் சிவலிங்க வழிபாடு செய்ததாக தலபுராணம் சொல்கிறது. எனவே, சுப்ரமண்யருக்கு முன்புறம் சிறிய ஸ்படிக லிங்கமும், பின்புறம் கருவறையில் பாபநாச லிங் கமும் திகழ்கின்றன.

ருவறையில் சிவகுமாரன் காட்சியளிக்கும் அழகை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. ஒரு முகம், இரண்டு கரங் களுடன், சுமார் ஐந்தடி உயரத்தில், நின்ற கோலத்தில் அருள்கிறார் முருகன். பாதங்களில் வீரக் கழல், வலது காலில் பூண் (ஓர் ஆபரணம்), மார்பில் வாகுவலயம், முகமோ சந்திர பிம்பம் - சூரிய பிரகாசம். வலது கரம் அபய முத்திரை காட்ட, இடது கரத்தை இடுப்பில் வைத்த வாறு திகழும் முருகனின் இந்தத் திருக்கோலத்தை. ‘சுப்ரமண்யன்’ என்று ஆகமங்களும், சிற்ப நூல்களும் குறிப்பிடுகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்