வினைகள் தீர்க்கும் வேலவன் தரிசனம்! | Temples of Lord Murugan and their Spiritual greatness - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (08/05/2018)

வினைகள் தீர்க்கும் வேலவன் தரிசனம்!

முருகப் பெருமானின் அவதாரத் திருநாளாம் வைகாசி விசாக நன்னாளில், அவரின் மகிமையைச் சொல்லும் சில திருத்தலங்களின் சிறப்புகளைத் தெரிந்துகொள்வோமா?

* கையில் தாமரை ஏந்திய முருகனை ஆவூர் தலத்தில் காணலாம். கனககிரி திருத்தலத்தில் முருகப் பெருமான், கிளி ஏந்திய நிலையில் தரிசனம் தருகிறார். திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் கையில் மாம்பழத்துடன் இருக்கும் வேலவனை தரிசிக்கலாம்.

கரூர் மாவட்டம் வெங்கமேடு ஆலயத்தில் வேலாயுதமும், தேவியர் இருவரும் இன்றி தனித்து அருளும் முருகப்பெருமானை தரிசிக்கலாம்.

வஜ்ராயுதம் ஏந்திய முருகனை சுவாமிமலை மற்றும் திருவிடைக்கழி ஆகிய தலங்களில் தரிசிக்கலாம்.

திருமயிலாடி, அனந்தமங்கலம், வில்லுடை யான்பட்டு, சாயக்காடு, திருக்கடவூர் மயானம் ஆகிய தலங்களில் வில்லுடன் காட்சி தருகிறார் முருகப் பெருமான். வில்- அம்பு ஏந்தி, வேட்டைக்குச் செல்வது போல் முருகன் காட்சி தரும் தலம் திருவையாறு.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close