ஆலயம் தேடுவோம்: அன்னபூரணியே தொடங்கிய திருப்பணி!

காசியில் தீபாவளியன்று அன்னபூரணியைத் தரிசிப்பது மிகவும் விசேஷம். காசிக்குச் செல்லா விட்டாலும், அனுதினமும் அன்னபூரணியின் அருளைப்பெற அற்புதமான வழி ஒன்று உண்டு. ஆம், அன்னதானம் செய்வதன் மூலம் நமக்கு எப்போது வேண்டுமானாலும் அன்னபூரணியின் திருவருள் கிடைக்கும்.

ஆனால், `கடனே' என்று அன்னதானம் செய்யக்கூடாது. அன்னதானசிவன் செய்ததுபோல் ஆத்மார்த்தமாக அன்னதானம் செய்யவேண்டும்.

யார் அந்த அன்னதான சிவன்?

கும்பகோணத்தை அடுத்துள்ள தேப்பெருமா நல்லூர் என்ற ஊரில் 1850-களின் தொடக்கத்தில் பிறந்தவர் அன்னதான சிவன். அவருடைய இயற்பெயர் இராமஸ்வாமி; சிறு வயதிலேயே பக்திமானாகத் திகழ்ந்தவர்.

பிற்காலத்தில், தம் சொத்துகளை விற்றும், மற்றவர்களிடம் நன்கொடை பெற்றும் பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு அன்னதானம் செய்தவர். இதன் காரணமாகவே இயற்பெயர் மறைந்து, அவருக்கு அன்னதானசிவன் என்ற பெயர் ஏற்பட்டுவிட்டது.

1909-ம் வருடம் காஞ்சிப் பெரியவர் கும்பகோணம் மடத்தில் எழுந்தருளினார். அப்போது நம் சுவாமிகளுக்கு வயது 15. அந்த வருடம் கும்பகோணம் மகாமக விழாவின்போது, பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு, அன்னதான சிவன் அன்னதானம் வழங்கினார். அந்த உன்னதப் பணியை காஞ்சி பெரியவர் வெகுவாக சிலாகித்துப் பேசவும் செய்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick