‘அம்பிகை கண் மலர்ந்தாள்!’ | Reader Experience about Amman - Sakthi Vikatan | சக்தி விகடன்

‘அம்பிகை கண் மலர்ந்தாள்!’

வாசகர் இறையனுபவம்...

து 1964-ம் ஆண்டு. கும்பகோணம் சார்ங்கபாணி சந்நிதித் தெருவில் வசித்து வந்தோம். தோட்டம், துரவு என்று பெரிய வீடு. தாத்தா, பாட்டி, அத்தைகள், சித்தப்பா, சித்திகள் என எங்கள் குடும்பமும் பெரியது.

எங்கள் வீட்டுத் தோட்டத்தில் மல்லிகையும், கனகாம்பரமும் பூத்துக்குலுங்கும். கனகாம்பரம் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த ஆண்டு புரட்டாசி மாத ஆரம்பத்தில், எங்கள் வீட்டுக் குழந்தைகளை அம்மை நோய் தாக்கத் தொடங்கியது. ஒவ்வொருவராக மாற்றி மாற்றி அவஸ்தைப்பட்டார்கள்.  என் தாத்தா, அம்மை போட்ட வீடுகளில் கடைப்பிடிக்கப்படும் எல்லா நியதிகளையும் எங்கள் விட்டில் கண்டிப்போடு செயல்படுத்தி வந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick