கேள்வி பதில்: அமாவாசை தினத்தில் வாசலில் கோலம் போடலாமா? | Spiritual Questions and answers - Sakthi Vikatan | சக்தி விகடன்

கேள்வி பதில்: அமாவாசை தினத்தில் வாசலில் கோலம் போடலாமா?

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

? அமாவாசையன்று வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது என்பதன் பின்னணியில், ஏதேனும் தத்துவம் இருக்கிறதா?

-எஸ்.கண்ணன், திருச்சி - 2


பொதுவாக முன்னோருக்கான வழிபாடுகளைச் செய்யும் `சிராத்தம்’ போன்ற தினங்களில் நமது வீட்டு வாசலில் கோலம் போடுவதில்லை. அதேபோல், முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த  அமாவாசை தினத்திலும் வீட்டு வாசலில் கோலம் போடுவதைத் தவிர்க்கவேண்டும்.

முன்னோரை வழிபட்டபிறகே தெய்வ வழிபாடுகள் தொடர வேண்டும் என்பதால், அமாவாசை தினத்தில் வீட்டு வாசலில் கோலம் போடுவதில்லை. கோலங்கள் தெய்வ வழிபாட்டுக்கு உரியவை என்பதுடன், மகிழ்ச்சியின் வெளிப்பாடாகவும் இருப்பவை. எனவே, முன்னோர்களை இழந்து அவர்களின் பிரிவால் வாடும் நாம், குறிப்பிட்ட தினங்களில் கோலம் போடுவதைத் தவிர்ப்பது மரபு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick