மகா பெரியவா - 14 | Maha Periyava: Spiritual stories - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/10/2018)

மகா பெரியவா - 14

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ஓவியங்கள்: கேஷவ்

ண்பரின் வற்புறுத்தலின்பேரில் மகா பெரியவரை தரிசிக்கச் சென்றார் சாமண்ணா ஷான்பாக். ஜன்னலுக்குப் பின்னால் சாந்தமே உருவமாக அமர்ந்திருந்த மகா பெரியவரைப் பார்த்ததுமே சாமண்ணாவின் உள்ளத்தில் ஆனந்தம் பெருகிற்று.

சற்று நேரம் மாமுனியை தரிசித்துத் திளைத்தார். ‘இந்த சந்நியாசியை எங்கேயோ பார்த்திருக்கிறோமே’ என்ற யோசனையுடன் வீட்டுக்குத் திரும்பியதும், தன் பழைய பெட்டியைத் திறந்து பார்த்தார் சாமண்ணா. பல வருடங்களுக்குமுன் யாரோ ஒருவர் கொடுத்திருந்த படம் அதற்குள் வைக்கப்பட்டிருந்தது. லேசாகப் பழுப்பேறிய அந்தப் படத்தை எடுத்துப் பார்த்தார். ‘இந்தப் படத்தில் இருப்பவரும் ஜன்னலுக்குப் பின்னால் அமர்ந்திருந்தவரும் ஒருவரே. அவரைப் பார்த்தால் உத்தமமான ஒரு சாதுவாகத்தான் தோன்றுகிறது.’ என்று நினைத்துக்கொண்டார்.

அன்று முதல் தினமும் சங்கர மடம் செல்வதை வழக்கமாகக் கொண்டார் சாமண்ணா. வெறுங்கையுடன் அல்லாமல், தயிர், பால், பழ வகைகளுடன் செல்வார். ஒரு நாள் ஐந்து லட்ச ரூபாயை எடுத்து வந்து சுவாமிகளிடம் சமர்ப்பித்தார்.
“இதெல்லாம் எதுக்கு?” என்று கை ஜாடையிலேயே கேட்டார் மகா பெரியவா. சந்நிதியில் பணம் சமர்ப்பிக்கும் பழக்கம் நின்று பல ஆண்டுகள் கடந்துவிட்டன என்பது சாமண்ணாவுக்குத் தெரியாது.

“சுவாமிகளுக்கு இஷ்டமான நல்ல காரியத்துக்குச் செலவழிக்கத்தான்...” என்று தயக்கத்துடன் இழுத்தார் சாமண்ணா.

“இதை எடுத்துண்டு போய் உன் மனசுக்குத் தோணுற தர்ம காரியத்தைச் செய்...”

இது சாமண்ணா எதிர்பார்க்காதது. இதுவரை அவர் சந்தித்த சந்நியாசிகள் அனைவரும் முதலில் பேசியது பணத்தைப் பற்றியதாகத்தான் இருந்திருக்கிறது. பெரியவா பணத்தைத் தொடுவதற்குக் கூட மறுக்கிறார். எடுத்துச் சென்றுவிடுமாறு பணிக்கிறார்.

சில நாள்கள் கழித்து மேலும் சில லட்சங்களை எடுத்துக்கொண்டு மடத்துக்குச் சென்றார். ‘பரமாத்மா’ என்று அவர் விளிக்கும் மகா பெரியவரை தரிசித்தார்.

“பரமாத்மா... உங்களின் பாதங்களில் வைத்த பணத்தை திருப்பி எடுத்துக்கொண்டு போக என் மனம் ஒப்பவில்லை. இது தங்களுக்காகத்தான். நீங்கள் சொல்லும் தர்மத்தை நிறைவேற்றக் காத்துக்கொண்டிருக்கிறேன். தயவு பண்ணி நிராகரித்துவிடாதீர்கள்....” என்ற சாமண்ணாவின் குரல் நடுங்கியது.

[X] Close

[X] Close