பூர்வபுண்ணியம்... குழந்தை பாக்கியம்!

திருமணம் முடிந்த தம்பதியர் அனைவரின் எதிர்பார்ப்பும், தங்கள் வம்சம் வளர வாரிசு வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். இது மனித இயல்பு. ஆனால், அழகு, அறிவு, நீண்ட ஆயுள் ஆகியவற்றுடன் குழந்தை பிறக்கவேண்டும் என்றால், தம்பதி இருவரின் ஜாதகத்திலும் சத்புத்திர பாக்கியம் இருக்கவேண்டும்.

சில குழந்தைகள் பிறந்ததும் இறந்துவிடுவதையோ அல்லது நோய்களுடன் கஷ்டப் படுவதையோ நாம் பார்க்க நேரிடுகிறது. இதற்குக் காரணம் குழந்தையின் ஜாதகத்தில் பாலாரிஷ்ட தோஷம் இருப்பதே. பாலாரிஷ்ட தோஷத்துடன் பிறந்த குழந்தைக்கு அந்த தோஷம் 12 வயது வரை நீடிக்கும். இதற்குக் குழந்தையின் தாய், தந்தை ஆகியோரின் கர்மவினைப் பயனும், குழந்தையின் பூர்வஜன்ம கர்மவினைப்பயனும் காரணமாகின்றன. ஒரு குழந்தையின் 4 வயது வரை தாயின் பாவ கர்மாக்களாலும், 4 முதல் 8 வயது வரை தந்தையின் பாவ கர்மாக்களினாலும், 8 முதல் 12 வயது வரை குழந்தையின் பாவ கர்மாக்களாலும் பாலாரிஷ்ட தோஷத்தால் பாதிப்பு ஏற்படுகிறது.

இது சிலருக்கு மாறுபடும். ஒவ்வொரு ஜாதகத்திற்கும், அதற்கான கிரகநிலைகள் மாறுபடும். இதனை குழந்தையின் ஜனன கால ஜாதகத்தைப் பார்ப்பதை விட உங்கள் பூர்வ புண்ணியம் கெட்டுள்ளதா என்று பாருங்கள். அது கெட்டிருந்தால், குழந்தையின் ஆயுள் கேள்விக்குறியாகிவிடும். பூர்வ புண்ணியம் கடுமையாகப் பாதிப்படையும் போது குழந்தை பாக்கியம் கூட சிலருக்குக் கிடைக்காது. அப்படியே குழந்தை பிறந்தாலும் நிலைக்காது. இதனை நாம் கண் கூடாக சில வீடுகளில் பார்க்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick