வாழ்வை வரமாக்குமா உங்கள் கையெழுத்து?

கையெழுத்து பற்றிய ஆராய்ச்சியை ஆங்கிலத்தில் கிராஃபாலஜி என்று அழைக்கிறார்கள். இந்த கிராஃபாலஜி, ‘மூளையின் செயல்பாடுகளே உடலின் அவயவங்களை இயக்குகின்றன. ஆக, உடல் உறுப்புகளின் செயல்களைக் கணிப்பதன் மூலம் நம் சிந்தனைகள் எப்படியானவை, அவற்றின் விளைவால் எதிர்காலம் எப்படி அமையும் என யூகிக்க முடியும்’ என்கிறது.

உதாரணமாக, ஒருவர் எப்போதும் பேனாவால் காகிதத்தில் கிறுக்கிக்கொண்டே இருக்கிறார் எனில், அவர் குழப்பத்தில் இருக்கிறார் என்று அர்த்தம். வெறும் கிறுக்கல்களாக இல்லாமல், தனது கையெழுத்தையே அடிக்கடி போட்டுப் பார்த்துக்கொண்டிருக்கிறார் எனில், ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் அவர் வெற்றியைச் சந்திப்பது நிச்சயமாம். அதேபோன்று ஒருவர் கையெழுத்து இடுவதை வைத்தே அவரது குணநலன்களையும், செயல்பாடுகளையும், அவற்றால் எழும் விளைவுகளையும் சொல்லிவிட முடியுமாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick