ராசிபலன்

செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 8-ம் தேதி வரை

அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்

மேஷம்

சூரியன் 6 - ம் வீட்டில் நுழைந் திருப்பதால், அரசு வகையில்  அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாகும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். புதிய இடத்தில் வேலை அமையும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். 

அக்டோபர் 1-ம் தேதி வரை புதன் 6-ம் வீட்டில்  மறைந்திருப்ப தால் உறவினர்கள், நண்பர்களின் அன்புத்தொல்லை அதிகரிக்கும். வீண்செலவுகள் ஏற்படும்; எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்வது நல்லது.

சுக்கிரனும் புதனும் 2-ம் தேதி முதல் 7-ம் வீட்டில் அமர்வதால் மனக்கசப்புகள் நீங்கும். இழுபறி யான வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். 4-ம் தேதி முதல் குரு பகவான் 8-ம் வீட்டில்  மறைவ தால், குடும்பத்தில் சிறு சிறு மனக் கசப்புகள் வந்து நீங்கும். எவ்வளவு பணம் வந்தாலும், செலவுகளும் அதிகரிக்கும்.

வியாபாரத்தில் போட்டிகளை உடைத்து முன்னேறுவீர்கள். லாபம் பெருகும். உத்தியோகத்தில், உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் குவியும்.

தன்னம்பிக்கையால் சாதிக்கும் நேரம் இது.


கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

ரிஷபம்

சூரியன் 5-ம் வீட்டில்  நிற்பதால் அடிக்கடி முன்கோபம் வரும்; தினமும் தியானம் செய்யப் பழகுங்கள். அரசாங்க விஷயங்கள் தாமதமாகும்.வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும்.

1-ம் தேதி வரை புதன் 5-ம் வீட்டில் நிற்பதால், புதுப் புது சிந்தனைகள் தோன்றும். நீண்ட நாள்களாக வராமலிருந்த பணம் கைக்கு வரும். பூர்வீகச் சொத்தில் உங்களுக்கான பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். உறவினர்களால் ஆதாயமடைவீர்கள்.

சுக்கிரனும் புதனும் 2 - ம் தேதி முதல் 6-ம் வீட்டில் மறைவதால் பிள்ளைகளால் அலைச்சல் ஏற்படும். குரு பகவான் 4-ம் தேதி முதல் 7-ல் அமர்வதால், குடும்பத்தில் அமைதி திரும்பும். தடைப்பட்ட திருமணப் பேச்சுவார்த்தை கைகூடும்.

வியாபாரத்தில், மறைமுகப் போட்டிகளை வென்று லாபத்தை அதிகரிக்கச் செய்வீர்கள். அஷ்டமச் சனி தொடர்வதால், வேலையாட்களை அனுசரித்துப் போவது நல்லது. உத்தியோகத்தில், சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். பணிகளை விரைந்து முடிப்பது நல்லது. கலைஞர் களுக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

மனநிறைவுடன் மகிழ்ந்திடும் வேளை இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick