பதவி உயர்வு எப்போது?

ராம்திலக்

‘பதவீ பூர்வ புண்ணியானாம்’ என்ற வாசகம், நமது பூர்வஜென்மத்தில் செய்த புண்ணியத்தைக் குறிக்கிறது. பூர்வ ஜென்மத்தில் அதிக புண்ணியம் செய்தவர்கள், இந்த ஜென்மத்தில் மிக உயர்ந்த பதவியைப் பெறுவார்கள்.

பலம் மிகுந்த 10-ஆம் வீட்டோனது தசை- புக்தி காலங்களில் பதவி உயர்வு கிடைக்கும். உதாரணமாக கடக லக்னத்தில் பிறந்த ஒருவருக்கு தொழில் ஸ்தானமான மேஷத்தில் செவ்வாய் பலம் பெற்றிருக்க, அவரது தசை- புக்திக் காலங்களில் பதவி உயர்வு கிடைக்கும்.

10-ஆம் வீட்டுக்கு நேர் 7-ஆம் வீடான 4-ஆம் இடத்தில், 4-ஆம் வீட்டோன் அமர்ந்திருக்க, அவருடன் சுபக் கிரகங்கள் கூடியிருந்தால்... 4-ஆம் வீட்டோனின் தசை- புக்திக் காலங்களில் பதவி உயர்வு கிடைக்கும்.

4-ஆம் வீடு நாம் அமரும் நாற்காலியைக் குறிக்கும். அந்தப் பதவி அல்லது வேலை மிகச் சிறப்பாக அமைய,  4-ஆம் இடம் வலுத்திருக்க வேண்டும். 4-ஆம் வீட்டோனும், 10-ஆம் வீட்டோனும் இணைந்து 4-ல் அமர்ந்து, 10-ஆம் இடத்தைப் பார்க்கும் நிலை அமையப் பெற்ற ஜாதகருக்கு உயர்பதவி கிடைப்பதுடன், பதவிச் சிறப்பும் உண்டாகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick